புள்ளி (சிற்றிதழ்)
புள்ளி இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்முனை எனும் நகரத்திலிருந்து 1993ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய இலக்கிய கவிதை சிற்றிதழாகும்.
ஆசிரியர்
தொகு- றாபிக்
பணிக்கூற்று
தொகுஈழத்தின் முதல் ஹைக்கூ கவியேடு
உள்ளடக்கம்
தொகுயப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹைக்கூ கவிதை 20ம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் இலங்கையிலும் பிரபல்யம் அடையலாயிற்று. குறிப்பாக தமிழ் மொழியில் ஹைக்கூ கவிதைகள் தீவிரமாக வளர்ச்சியடைந்திருந்தது. ஹைக்கூ கவிதை வளர்ந்த எழுத்தாளர்களை விடவும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களிடம் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அடிப்படையில் இலங்கையில் தமிழ்மொழி மூலம் எழுதக்கூடிய ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளை இது கொண்டிருந்தது.
வெளியீடு
தொகுபுதிய கலைஞர் வட்ட வெளியீடு
ஆதாரம்
தொகு- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்