புவனேசுவர் 1

இந்தியாவின் ஒடிசாவிலுள்ள பேரங்காடி

புவனேசுவர் 1 (Bhubaneswar 1) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரம் நகரத்தில் வரவிருக்கும் ஒரு வணிக வளாகமாகும். கதாகனா மௌசாவில் இப்பேரங்காடி அமைந்துள்ளது. புவனேசுவரம் நகரத்திலுள்ள மிகப்பெரிய பேரங்காடிகளில் ஒன்றாக இது இருக்கும். பேரங்காடி மொத்தம் 350,000 சதுர அடி (33,000 சதுர மீட்டர்) பரப்பளவைக் கொண்டிருக்கும். பேரங்காடி யுனிடெக் குழுமத்தால் வடிவமைக்கப்பட்டு ஐந்து தளங்களில் பரவியுள்ளது என்று அறியப்படுகிறது.[1] 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கடைகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள், உணவகங்கள், குடும்ப பொழுதுபோக்கு மண்டலங்கள், பல்சேர் திரையரங்குகள் மற்றும் பல் நிலை வாகன நிறுத்துமிடம் ஆகியவை இப்பேரங்காடியில் அடங்கியுள்ளன. பேரங்காடி இன்னும் திறக்கப்படவில்லை. ஒரிசா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு காரணமாக அனைத்து கட்டுமானங்களும் தற்போது முடங்கியுள்ளன.[2]

புவனேசுவர் 1
புவனேசுவர் 1
இருப்பிடம்:புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
அமைவிடம்20°18′54″N 85°49′41″E / 20.314885°N 85.827943°E / 20.314885; 85.827943
திறப்பு நாள்2020
உருவாக்குநர்யூனிடெக்கு குழுமம்
கடைகள் எண்ணிக்கை200+
கூரை எண்ணிக்கை3
மொத்த வணிகத் தளப் பரப்பளவு350,000 sq ft (33,000 m2)
தள எண்ணிக்கைG+4
வலைத்தளம்Bhubaneswar 1 - Unitech

மேற்கோள்கள் தொகு

  1. "Overview - Bhubaneswar 1 (Unitech)". பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  2. "Unitech's Bhubaneswar 1 - Brochure" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனேசுவர்_1&oldid=3814430" இலிருந்து மீள்விக்கப்பட்டது