புவிமேலோடுகளின் பட்டியல்

புவி மேலோடுகள் புவிக் கற்கோளத்தின் மிகப்பெரிய பாகங்கள் ஆகும்; புவிப் புறப்பகுதி (earth crust) மேல் மூடகம் (upper mantle) - இவையிரண்டையும் பொதுவாக அழைப்பது கற்கோளம் என்ற பெயரால். ஏறக்குறைய 100 கி.மீ. தடிமன் கொண்ட இவை இரண்டு விதமான பொருள்களால் ஆனவை:

  • மாகடல் புறப்பகுதிப் பொருள் (oceanic crust) (அ) சிமா = சிலிக்கன், மெக்னீசியம்.
  • கண்ட புறப்பகுதிப் பொருள் (continental crust) (அ) சியால் = சிலிக்கன், அலுமினியம்.

புவி மேலோடுகள் பின்வரும் வகையானவை:

முதன்மை மேலோடுகள்

தொகு
  • ஆப்பிரிக்க மேலோடு
  • அண்டார்ட்டிக மேலோடு
  • யுரேசிய மேலோடு
  • இந்தோ-ஆசுதிரேலிய மேலோடு
  • வட அமெரிக்க மேலோடு
  • பசிபிக் மேலோடு
  • தென் அமெரிக்க மேலோடு

துணை மேலோடுகள்

தொகு
  • அரேபிய மேலோடு
  • கரீபிய மேலோடு
  • யுவான் ட பியூகா மேலோடு
  • நாசுகா மேலோடு
  • பிலிப்பைன் கடல் மேலோடு
  • சுகோடியா மேலோடு