புவியரிமானப் படிவுகள்
புவியரிமானப் படிவுகள் (Terrigenous sediments) என்பவை நிலப்பரப்புகளில் உள்ள பாறைகள் அரிக்கப்படுவதால் பெறப்பட்ட படிவுகளைக் குறிக்கிறது. அதாவது கடற்பகுதிக்கு எதிரான நிலப்பகுதி சூழலிலிருந்து இப்படிவுகள் உருவாகின்றன [1]. மணல், சேறு, மற்றும் வண்டல் ஆகியனவற்றைக் கொண்டுள்ள இப்படிவுகள் ஆறுகளால் கடலுக்கு அடித்துவரப்படுகின்றன. பொதுவாக இப்பகுதிக்கூறுகள் அனைத்திற்கும் பாறைகளே மூலமாகும். இத்தகைய படிவுகள் கண்டத்திட்டுகளில் மட்டுமே பெரும்பாலும் படிகின்றன [2].
எரிமலைகள், பாறைகளின் காலநிலை, காற்று வீசுதலால் பெறப்படும் தூசு, பனியாறுகளால் அரைக்கப்படுபவை மற்றும் பனிப்பாறைகளால் கடத்தப்படும் வண்டல் ஆகியவை இப்படிவுகளுக்கான ஆதார மூலத்தில் அடங்கும்.
இன்றைய சமுத்திரங்களில் உள்ள குறிப்பிடத்தக்க அளவிலான உப்புக்கு இப்புவி அரிமானப் படிவுகளும் ஒரு காரணமாகும். காலப்போக்கில் ஆறுகள் மேலும் மேலும் கடலுக்கு தாதுக்களைத் தொடர்ந்து கொண்டு செல்கின்றன. இச்செயல்முறையில் நீர் ஆவியாவதால் கனிமங்கள் விட்டு செல்லப்படுகின்றன. உயிரியல் செயல்முறைகளால் குளோரின் மற்றும் சோடியம் தனிமங்கள் நுகரப்படுவதில்லை என்பதால் இந்த இரண்டு தனிமங்களும் கரைந்துள்ள கனிமங்களில் மிகப்பெரிய பகுதியாக இருக்கின்றன [3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Pinet 1996, ப. 79.
- ↑ Pinet 1996, ப. 79–83.
- ↑ Swensen, Herbert (1983). Why is The Ocean Salty?. U.S. Geological Survey. http://files.eric.ed.gov/fulltext/ED241328.pdf. பார்த்த நாள்: 26 January 2016.