புவி மைய வட்டப்பாதை

புவி மைய வட்டணை (Geocentric orbit) என்பது புவியை மையமாகக் கொண்டு சுற்றி வரும் வட்டப்பாதையைக் குறிக்கிறது. உதாரணமாய் சந்திரன் சுற்றி வரும் வட்டப்பாதை பூமியை மையமாகக் கொண்டது. 1997 ஆம் ஆண்டு நாசாவின் அறிக்கையின் படி சுமார் 2,465 செயற்கைக்கோள்கள் இவ்வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன. மேலும் 6,216 விண்வெளிக் கழிவுகளும் இவ்வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன.[1] முன்னர் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் ஏவூர்தியின் பாகங்கள் 16,291 அதிகமாக இப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Satellite Situation Report, 1997". NASA Goddard Space Flight Center. 2000-02-01. 2006-08-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-09-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_மைய_வட்டப்பாதை&oldid=3754344" இருந்து மீள்விக்கப்பட்டது