புவி வெப்ப மண்டலங்கள்
புவி வெப்ப மண்டலங்கள் (Geographical zones) என்பன அட்சக்கோட்டுப் பரவலைப் பொறுத்து மாறுபடும் வெப்பநிலையின் அடிப்படையில் புவிக்கோளத்தின் பிரிப்புகளாகும்.
ஐந்து பிரிவுகள்
தொகு- வடக்கு குளிர் மண்டலம் - 66.5 டிகிரி ஆர்டிக் வட்டத்திலிருந்து 90டிகிரி வடதுருவம் வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 4.12% பரவியுள்ளது
- வடக்கு மிதவெப்ப மண்டலம் - கடகரேகை என்று அழைக்கப்படும் 22.5டிகிரி வடஅட்சரேகையில் இருந்து ஆர்டிக் வட்டம் எனப்படும் 66.5டிகிரி வடஅட்சரேகை வரை பரவியுள்ளது - புவியின் பரப்பளவில் 25.99% பரவியுள்ளது.
- வெப்பமண்டலம் - இது நிலநடுக்கோட்டு வெப்பமண்டலம் என்றும் அழைக்கப்படும். 23.5டிகிரி வடஅட்சக்கோடு (கடகரேகை)யில் இருந்து 23.5டிகிரி தென் அட்சரேகை (மகரரேகை) வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 39.78% பரவியுள்ளது.
- தெற்கு மிதவெப்ப மண்டலம் - கடகரேகை என்று அழைக்கப்படும் 22.5டிகிரி தெற்குஅட்சரேகையில் இருந்து அண்டார்டிக் வட்டம் எனப்படும் 66.5டிகிரி தெற்குஅட்சரேகை வரை பரவியுள்ளது - புவியின் பரப்பளவில் 25.99% பரவியுள்ளது.
- தெற்கு குளிர் மண்டலம் - 66.5 டிகிரி அண்டார்டிக் வட்டத்திலிருந்து 90டிகிரி தென் துருவம் வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 4.12% பரவியுள்ளது