புஸ்ஸதேவ, சித்துல்பவ்வ என்ற இடத்திற்கு அருகில் உள்ள உத்பல எனும் ஊரில் வாழ்ந்த பிரதானி ஒருவனின் மகன். பிள்ளைகளிடையே சிறு வயது முதலே சிறப்பு பெற்றிருந்தான். ஒரு நாள் விகாரைக்கு சென்ற அவன் அங்கிருந்த சங்கை எடுத்து ஊதினான். அதன் ஒலியால் அங்கிருந்தவர்கள் கீழே விழுந்தனர். அவனது தந்தை அவனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அவன் வில்வித்தையில் சிறந்து விளங்கினான். இவன் எய்யும் அம்பு நீண்ட தூரம் செல்ல வல்லதாயிருந்தது. இவன் திறமையை அறிந்த காவன்தீசன் இவனைப் படையில் சேர்த்துக்கொண்டான். இவன் அம்பால் பல்லுக எனும் தமிழ் தலைவன் இறந்தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஸ்ஸதேவ&oldid=1583704" இலிருந்து மீள்விக்கப்பட்டது