பூக்கோட் காஞ்சி
பூக்கோட் காஞ்சி என்னும் துறையைக் காஞ்சித்திணையின் 22 துறைகளில் ஒன்றாகப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
'கார் எதிரிய கடல் தானை போர் எதிரியப் பூக் கொண்டன்று' என்பது அதன் நூற்பா(70)
நொச்சி நியமங்கிழாரின் புறநானூற்றுப் பாடல்(293) இந்தத் துறையைச் சேர்ந்த பாடல். இந்தப் பாடலில் பூக்கோள் என்பது இரண்டு வகையில் பொருள் படும் வகையில் அமைந்துள்ளது.
- பூ என்னும் நிலத்தைக் கொள்வது ஒருவகைப் பொருள். இந்தப் பொருளைத்தான் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
- பூ என்பது ஒருத்தியின் பூப்பு. வெற்றி பெற்ற அரசன் அந்நாட்டுத் தலைவன் மகளின் பூப்பையும் கைப்பற்றுவானோ என அஞ்சுவதும் பூக்கோள் என்ற எண்ணும்படி இந்தப் புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது.
தொல்காப்பியம் இத் துறையைக் குறிப்பிடவில்லை. தொல்காப்பியம் 'காஞ்சி' என்னும் சொல்லை நிலையாமை என்னும் பொருளில் கையாளுகிறது.