பூங்கனி அம்மாள்

தமிழ் வில்லூபாட்டு கலைஞர்

பூங்கனி அம்மாள் அல்லது பூங்கனி (Poongani) (பிறப்பு:2 நவம்பர் 1934) என்பவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பெண் வில்லுப்பாட்டுக் கலைஞர் ஆவார் .வில்லிசைப்பாடல் மூலம் கதை சொல்லும் வழக்கம் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வகையில் பூங்கனி அம்மாள் வில்லுப்பாட்டுத் துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராக விளங்கினார். இவரது கலைச்சேவையயைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு “ஓம் முத்துமாரி” என்ற விருது வழங்கியது.

வாழ்க்கை தொகு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சரவணன்தேறி எனும் கிராமத்தில் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். [1][2] [3] நான்காம் வகுப்பு வரை படித்த இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர இயலவில்லை. இளம் வயதில் உள்ளூர் கோவில் திருவிழாவில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் கவரப்பட்ட இவரை வில்லுப்பாட்டு கலைஞர்களான லக்ஷ்மி மற்றும் தனலட்சுமி ஆகியோரின் உற்சாகப்படுத்தினர். இதன் காரணமாக இவர் இந்த கலையில் ஆர்வம் கொண்டு பாரம்பரிய இசைக் கலைஞர்களான வேதமாணிக்கம் புலவர் மற்றும் சிவலிங்கம் வாத்தியார் அவர்களிடம் இவர் இந்த கலையைக் கற்றறிந்தார். பின்னர் ஒரு சிறு இசைக் குழுவை ஆரம்பித்து அதன் மூலம் வில்லுப்பாட்டு பாட ஆரம்பித்தார்.தங்கபாண்டியன் என்ற கடம் வாசிப்பாளர் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவரையே தனது 15வது வயதில் திருமணம் செய்து கொண்டார் பின் இருவரும் சேர்ந்து வில்லுப்பாட்டு கலையை மேடைகளில் பாடத் தொடங்கினார். பூங்கனி அம்மாளின் கணவர் தங்கபாண்டியன் 2015 ஆம் ஆண்டு இறந்தார் [4] [5] தனது இறுதி ஆண்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் ராப் இசைப் பாடகி லேடி காஷ் என்பவர் அவரை சந்திக்க வீட்டிற்கு வருகை தந்து இல்லத்தை சுத்தம் செய்து புணரமைத்துக் கொடுத்தார் இவரது வருகைக்குப்பின் பூங்கனி அம்மாள் அனைவராலும் கவனிக்கப்பட்டார். பின்னர் லேடி காஷ்வில்லுப்பாட்டு” என்ற பெயரில் ஒரு ராப் இசை பாடலை உருவாக்கி பூங்கனி அம்மாளை அதில் தோன்றச் செய்து அவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.[6]

கலை வாழ்க்கை தொகு

வில்லுப்பாட்டு என்பது இசையின் மூலம் நீண்ட கதை சொல்லும் கலை வடிவமாகும் இது நரம்பினால் இழுத்து கட்டப்பட்ட வில்லை அடிப்படை இசைக்கருவியாகக் கொண்டுள்ளது. இவருடன் இசைப்குழுவைச் குழுவும் சேர்ந்தவர்களும் பாடலின் இடையிடையே பாடுபவருடன் உரையாடுதல், இவர் சொல்லும் கருத்தை ஆமோதித்தல் போன்ற செயல்கள் மூலம் வில்லுப்பாட்டில் ஆர்வத்தை உண்டாக்குவார். வில்லை அடிக்கும் குச்சியை சிறிது மேம்படுத்தி தனித்துவம் வாய்ந்த வீசுகோல் என்ற தனித்த குச்சியை பயன்படுத்தி இவர் விலலுப்பாட்டைப் பாடுவார். இந்த வீசுகோல் பல மணிகள் கட்டிய இரட்டை குச்சி ஆகும். இது வில்லினை அடிக்கப் பயன்படுத்துகிறது. மகாபாரதம் மற்றும் இராமாயணத்தில் இருந்து கதைகளை எடுத்து வில்லுப்பாட்டின் மூலமாக பாடப்படுகிறது. மேலும் சமயம் சார்ந்த பாடல்களும், பாரம்பரிய பாடல்களும் வில்லுப்பாட்டில் பாடப்படும். பெரும்பாலும் முத்தாரம்மன், சந்தனமாரியம்மன் ,பேச்சியம்மன், சுடலை மாடன் சாமி போன்ற கோவில்கள் போன்ற மதம்சார்ந்த திருவிழாக்களில் வில்லுப்பாட்டு நடத்தப்பட்டு வருகிறது. 50 வருடங்களுக்கு மேலாக தனது எழுபதாவது வயதில் ஓய்வு பெறும் வயது வரை இந்த கலையைத் தொடர்ந்தார். பூங்கனி வில்லுப்பாட்டு கலைகளை பிரபலப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனுடன் பல புதிய பாடல் வடிவங்களையும் புதிய பாடல் மெட்டுக்களையும் உருவாக்கி பல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்தார். இவர் பல இளம் தலைமுறை கலைஞர்களுக்கும் வில்லுப்பாட்டு தொடர்பான பயிற்சியும் அளித்துள்ளார் .

மேற்கோள்கள் தொகு

  1. T. Ramakrishnan (27 June 2018). "தமிழகத்தின் முதல் பெண் வில்லுப்பாட்டுக் கலைஞர்!" (in Tamil). Dinamani. http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/jun/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-2948464.html. பார்த்த நாள்: 11 November 2018. 
  2. Vishnu Swaroop (22 July 2016). "A tale of Poongani, the oldest living villupaattu performer in Tamil Nadu". The Times of India. https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/a-tale-of-poongani-the-oldest-living-villupaattu-performer-in-tamil-nadu/. பார்த்த நாள்: 11 November 2018. 
  3. K. Kathivaran (18 November 2016). "வியக்க வைக்கும் வில்லிசை வித்தகி" (in Tamil). Dinakaran இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181111215409/http://www.dinakaran.com/ladies_Detail.asp?Nid=4728. பார்த்த நாள்: 11 November 2018. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
  5. B. Kolappan (2 June 2018). "A villupaatu artiste and the sad notes of life". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200303184509/https://www.thehindu.com/news/national/tamil-nadu/a-villupaatu-artiste-and-the-sad-notes-of-life/article24069629.ece. பார்த்த நாள்: 11 November 2018. 
  6. https://www.youtube.com/watch?v=_6RJqixpTI4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கனி_அம்மாள்&oldid=3916244" இலிருந்து மீள்விக்கப்பட்டது