பூசண வித்து

பூசண வித்து எனப்படும் டீலியோசுபோர் (Teliospore) அல்லது புழுதிச் செதில் அல்லது துருச்செதில் அல்லது வன்செதில் என்பது தடித்த கலச்சுவருடைய ஓய்வு நிலையிலிருக்கும் பூஞ்சையின் இரு உட்கரு விதைச்செதில் ஆகும். இதிலிருந்து பேசிடியம் எனும் விதைச் செதில் தோன்றுகிறது. இது பூஞ்சைத் துருநோயை உருவாக்கும்.[1][2]

ஜிம்னோசுபொராஞ்சியம் குளூபோசம் பூஞ்சையின் இருகலப் புழுதிச்செதில்

தோற்றம்

தொகு

பேசிடியம் எனும் நான்கு கலச்செதில், பலகலப் பூஞ்சைகளின் இருகல வன்செதிலிலிருந்து தோன்றுகின்றது. இருகல வன்செதில் விருந்தோம்பியை முதல் நிலை விருந்தோம்பியாகவும், நான்கு கல வன்செதில் விருந்தோம்பியை இரண்டாம் நிலை விருந்தோம்பியாகவும் கொண்டுள்ளது.

புற அமைப்பு

தொகு

பூஞ்சை வன்செதில்கள் ஒன்று, இரண்டு, அல்லது பல உட்கருக்களைக் கொண்ட கலங்களாகும். இவை கருமை நிற, தடித்த கலச்சுவருடையவை. இருகலங்களைக் கொண்ட பூஞ்சை வன்செதில்கள் பக்சீனியா பேரினத்தில் காணப்படுகின்றன. இதன் கலச்சுவரின் நுனிப்பகுதி நன்கு தடிப்புற்று காணப்படும். இவை இரட்டை உட்கருக்களைக் கொண்ட கலங்கள் ஆகும். எனவே இவை முளைக்கும் போது, உட்கரு பிளவுபட்டு, குன்றல் பிரிவு வழி நான்கு கலங்களைக் கொண்ட பேசிடியம் தோன்றுகிறது. இதிலிருந்து தனிக்கரு உடைய நான்கு பேசிடியத் தனிச் செதில்கள் தோன்றுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Teliospore - an overview | ScienceDirect Topics". www.sciencedirect.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-13.
  2. C.J. Alexopolous, Charles W. Mims, M. Blackwell, Introductory Mycology, 4th ed. (John Wiley and Sons, Hoboken NJ, 2004)

பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-52229-50-471-52229-5

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசண_வித்து&oldid=4051075" இலிருந்து மீள்விக்கப்பட்டது