பூச்சொல்லி
பூவின் பெயர்களைச் சொல்லி விளையாடும் விளையாட்டின் பெயர் பூச்சொல்லி.
ஆடும் முறை
தொகுஆட்டத்தில் இரண்டு அணிகள் இருக்கும். ஒரு அணியிலுள்ள அனைவரும் வெவ்வேறு பூக்களின் பெயர்களைப் பொத்தியாளிடம் கூறுவர். அவர்கள் உள்நோக்கி உள்வட்டமாக அமர்வர். இரண்டாவது அணியினர் வெளிவட்டமாக அமர்ந்து அவர்களின் கண்ணைப் பொத்துவர்.
பொத்தியாள் வட்டத்தின் நடுவில் நின்றுகொண்டு அவர்கள் சொன்ன பூவின் பெயர்களில் ஒன்றைச் சொல்லி அழைப்பார். அந்தப் பூவின் பெயரைச் சொன்னவரின் கண்கள் திறந்து விடப்படும். அவர் பொத்தியாளிடம் வருவார். பொத்தியாள் அவரின் கண்ணைப் பொத்திக்கொள்வார். வட்டத்தில் கண்களைப் பொத்திய அணியினரில் ஒருவர் வந்து பொத்தியாள் கண்பொத்தியிருப்பவர் தலையில் அவருக்கு வலிக்காமல் ஒரு குட்டுப் போடுவார். கண் பொத்திக்கொண்டிருப்பவர் குட்டியவர் யார் எனச் சொல்லவேண்டும். இதற்கு மூன்று வாய்ப்புகள் தரப்படும். அதற்குள் கொட்டியவர் யார் என்று சொல்லிவிட்டால் அவரது அணியினர் வெளியணியாகி எதிர் அணியினரின் கண்ணைப் பொத்தலாம். சொல்லாவிட்டால் அந்தப் பூச்சொல்லி அணியிலிருந்து மற்றொருவர் அழைக்கப்பட்டுக் கண் பொத்தப்பட்டுக் குட்டப்படுவார்.
இப்படி இது விளையாடப்படும்.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.