பூஞ்சையிழை
பூஞ்சையிழை பூஞ்சைகளின் ஒரு பதிய வளர்ச்சிப் பாகம் அல்லது பூஞ்சை போன்று கிளைகொண்ட திணிவுகளையும் நூல் போன்ற இழைகளையும் கொண்ட பாக்ரீரிய குடி ஆகும். இந்த இழையமைப்பு கொண்ட திணிவு சில வேளை சைறோ(shiro) என அழைக்கப்படும். இந்தப்பூஞ்சையிழைகளுடனான பூஞ்சை குடியேற்றத்தை மண்ணின் உள்ளேயும் மேலேயும் மற்றும் ஏனைய கீழ்ப்படைகளிலும் காணலாம்.
பூஞ்சைகள் சூழலில் இருந்து போசணையை உறுஞ்சிக் கொள்வதற்கு பூஞ்சையிழையினைப் பயன்படுத்துகின்றது. இது இரண்டு செயன்முறைகளினூடாக நடைபெறுகின்றது. முதலாவது இழைகள் உணவுகளின் மீது நொதியத்தைச் சுரக்கும். இந்த நொதியம் உணவிலுள்ள உயிரியல் பல்பகுதியங்களை அதன் சிறிய அலகான ஒருபகுதியமாக உடைக்கின்றது. இந்த ஒருபகுதியச் சேர்வைகள் பூஞ்சையிழை ஊடாக பரவல் மூலம் உறுஞ்சப்படும்.
தரை, மற்றும் நீர்ச் சூழல் தொகுதிகளில் தாவரங்களின் பிரிந்தழிகைச் செயற்பாடில் பூஞ்சையிழைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணின் சேதனமுறை பிரிகைக்கும் கரியமில வாயுவை வெளியிடும் கார்பன் வட்டத்திலும் பூஞ்சையிழைகள் பயன்படுகின்றன.
வன்மையான தாவரங்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படுவதில் பூஞ்சை இழைகள் இணைக்கும் பாகங்களாக தொழிற்படுவதால் அவை மழையினால் அடித்துச் செல்லப்படாமல் தடுக்கப்படும்.
"பூஞ்சையிழைகள்" என்பதை கூறிக்கும் பதமான Mycelium, பங்கசுக்கள்(fungus) போன்று ஒரு திரள் பெயராக கருதப்படுகின்றது. ஒருமை பன்மை குறிப்பிட முடியாத பெயராக கொள்ளலாம். பூஞ்சையிழை (mycelia), பங்கசு (fungi) போன்று ஒருமைப் பெயராகும்.
ஸ்குலேரொசியா என்பது இறுக்கமான அல்லது கடினமான பூஞ்சையிழைத் திணிவாகும்.
பயன்கள்
தொகுசூழற்றொகுதிகளில் பூஞ்சைகளின் முக்கிய பங்களிப்பு சேதனச் சேர்வைகளை பிரிந்தழியச் செய்தலாகும். பெற்றோலியப் பொருட்களும் சில பீடை நாசினிகளும் சேதனப் பதார்த்தங்களாக இருப்பாதால் அவை பூஞ்சைகளுக்கு கார்பன் மூலங்களாகின்றன.இதனால் அவை பூஞ்சைகளின் மூலம் பிரிந்தழிதலுக்கு உட்படுகின்றன. இதனால் சூழலில் நஞ்சு சேர்வது தடுக்கப்படுகின்றது இச் செயற்பாடு உயிரியல் சீராக்கம் எனப்படும்.
உயிரியல் வடிகட்டியாக பூஞ்சையிழைப் பாய்கள் நீர் மற்றும் நிலத்திலிருந்து வேதிப்பொருட்களையும் நுண்ணங்கிகளையும் அகற்றுவதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது. இச் செயற்பாடு, இழை வடிகட்டல் எனப்படும்.
பங்கசுக்களும் தாவரங்களும் ஒன்றியவாழிகளாகக் காணப்படும் வேர்க் கவசக் கூட்டம் பயிர் விளைச்சலை அதிகரிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது.
2007 ஆம் ஆண்டிலிருந்து எக்கோவேடிவ் டிசைன் எனப்படும் நிறுவனம் பொலிஸ்ரைரீன் மற்றும் பிளாத்திக்கு பொதியிடல் பதார்த்தங்களுக்குப் பதிலாக விவசாயக் கழிவுகளிலிருந்து தாயாராகும் பூஞ்சையிழைகளைப் பயன்படுத்தி மாற்றுப் பொருட்களைத் தயாரித்தது. இரண்டு பாதார்த்தங்கள் ஒன்று கலக்கப்பட்டு,அவை பூஞ்சை ஒன்றில் 3-5 நாட்கள் வைக்கப்பட்டு அழியாத பொருளாக வளர விடப்படும். பயன்படுத்தப்பட்ட பூஞ்சையிழையின் வகைக்கு ஏற்ப உருவாகும் பதார்த்தம் நீரை உறுஞ்சும் பொருளாகவும், மின்காவலியாகவும், சுவாலைத் தடுப்பியாகவும் தொழிற்படும்.[1]
2013 இல் மற்றொரு நிறுவனமான மைக்கோ வெர்க் பூஞ்சை இழை தளவாடங்கள், புஞ்சையிழை செங்கற்கள், தோல் ஆகியவற்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. மற்றொரு நிறுவனமான போல்ட் திறட் பூஞ்சையிழையிலான போலியான தோல் உற்பத்தி செய்துள்ளது.[2]
உயிர்த் திணிவுகளை கூட்டெருவாக மாற்றுவதில் பூஞ்சைகள் இன்றி அமையாதனவாகும். அடிப்படைப் பொருளில் உள்ள லிக்னின் மற்றும் ஏனைய நுண்ணங்கிகளால் பிரிந்தழியாத கூறுகளையும் பிரிகையுறச் செய்யும்.[3] கொல்லைப் புறங்களில் காணப்படும் கூட்டெருக் குவியல்கள் பூஞ்சையிழைகளினால் பிரிந்தழிகின்றன. சேதனப் பண்ணை முறைமைகளில் கூட்டெரு மண் பரிகரணம் மற்றும் போசணை வழங்குவதில் முக்கியமுடையது.[4]
மேலும் படிக்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kile, Meredith (September 13, 2013). "How to replace foam and plastic packaging with mushroom experiments". Al Jazeera America.
- ↑ Eleanor Lawrie (10 Sep 2019). "The bizarre fabrics that fashion is betting on". BBC (in ஆங்கிலம்).
- ↑ "Composting - Compost Microorganisms". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 17 April 2014.
- ↑ Epstein, Eliot (2011). Industrial Composting: Environmental Engineering and Facilities Management. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 143984531X.