பூட்டானிய நாட்டுப்பண்
துருக் ட்ஸெந்தென ("விரித்திரநாக (டிராகன்) இராச்சியம்") என்று தொடங்கும் பாடல் பூட்டான் நாட்டின் நாட்டுப்பண் ஆகும்.
འབྲུག་ཙན་དན་ | |
பூட்டான் தேசிய கீதம் | |
இயற்றியவர் | தஷொ கியால்டுன் தின்லி |
இசை | அகு டொங்மி |
சேர்க்கப்பட்டது | 1953 |
இது 1953இல் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டது. "அகு டொங்மி" இசை அமைத்த இப்பாடலை எழுதியவர் தஷொ கியால்டுன் தின்லி. இந்தியாவில் கல்விபெற்ற டொங்மி, ராணுவ பிராஸ் பாண்டின் தலைவரானார். அப்போது இந்தியப் பிரதமரான நேருவின் வருகையை ஒட்டி நாட்டுப்பண் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டது. டொங்மியின் முதல் இசை பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் நாட்டுப்பண்களுடன், த்ரி னியம்ப மெட் பா பெமாய் த்ரி (தமிழில்: மாறாத தாமரை சிம்மாசனம்) பூட்டானிய கிராமிய இசையயும் அடியொற்றி அமைந்திருந்தது. டொங்மிக்குப் பின் இசைக் குழுத் தலைவர்களாகப் பதவி ஏற்றவர்கள் இரண்டு முறை இப் பாடலின் இசையில் மாற்றம் செய்தனர்.
தொடக்கத்தில் இந் நாட்டுப்பண் 12 வரிகளைக் கொண்டிருந்தது. ஆனால் 1964 இல் அரசரின் செயலாளர் நாட்டுப்பண்ணைத் தற்பொழுது பயன்படும் 6 வரிகளைக் கொண்ட பாடலாக மாற்றினார்.
கிராமிய இசையைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்பாடலுக்கு நடன வடிவம் ஒன்றும் உண்டு. டொங்மியே இதனையும் இயக்கினார்.
ஜொங்கா
தொகுའབྲུག་ཙན་དན་བཀོད་པའི་རྒྱལ་ཁབ་ནང་
དཔལ་ལུགས་གཉིས་བསྟན་སྲིད་སྐྱོང་བའི་མགོན་
འབྲུག་རྒྱལ་པོ་མངའ་བདག་རིན་པོ་ཆེ་
སྐུ་འགྱུར་མེད་བརྟན་ཅིང་ཆབ་སྲིད་འཕེལ་
ཆོས་སངས་རྒྱས་བསྟན་པ་དར་ཞིང་རྒྱས་
འབངས་བདེ་སྐྱིད་ཉི་མ་ཤར་བར་ཤོག་
பூட்டானிய வரிகளின் ஒலிபெயர்ப்பு
தொகுத்ருக் ட்ஸெண்டென் கொய்பி க்யெல்காப் னா
பெல் லூக் னிக் டெண்ஸி சொங்வாய் க்யொன்
த்ருக் ஙாதக் கியெல்பொ ரின்பொக்
கு ஜ்ர்மெ டென்சிங் சம் ட்ஸிட் பெல்
சொ சாங்யெ டென்பா டார்ஷிங்க் கியெல்
பாங் டெக்யெட் ன்யிமா ஷார் வர் ஷொ.
தமிழ்
தொகுசைபிரசு மரங்கள் சூழ்ந்த டிராகன் சாம்ராச்சியத்தில்,
துறவிமாடங்களும், பாரம்பரியங்களும் கொண்ட புண்ணியபூமியில்,
டிராகன் பேரரசரின், செங்கோலாட்சியில்,
அவரின் நல்ஆசியாலும், வளமான ஆட்சியாலும்,
அறிவொளி செழித்து தழைத்தோங்கி,
மக்கள் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டு கதிரவனாக பிரகாசிக்கட்டும்