பூண்டு தோலுரிப்பான்

சமையலறைப் பொருள்

பூண்டு தோலுரிப்பான் (garlic peeler) என்பது பூண்டுப் பல்லின் தோலினை உரிக்கப் பயன்படும் சமையலறைக் கருவியாகும். ஏறத்தாழ விரல் அளவு இருக்கும் இது சிலிக்கான் அல்லது இரப்பரால் செய்யப்பட்ட குழாய் ஆகும்.[1][2] அமெரிக்க வடிவமைப்பாளர் பென் ஒமிசை (Ben Omessi) இதனை கண்டு பிடித்தார். 1998 ஆம் ஆண்டு இதற்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார்.[3][4]

பூண்டின் தோலுரிக்கும் சிலிக்கான் குழாய்
அந்த சிலிக்கான் குழாய் பயன்பாடு

பயனாகும் முறை

தொகு

இக்குழாயில், ஒரு பூண்டுப் பல்லினைச் செருகி, மெதுவாக அழுத்தி உருட்டினால், அக்குழாயில் பூண்டும், அதன் தோலும் தனித்தனியாகப் பிரிந்து விடும். பின்பு அவற்றை வெளியே எடுத்து விடலாம். இது மின்சாரம் இல்லாமல், மனித சக்தியாலே பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்புத் தன்மையாகக் கருதப்படுகிறது.

இதையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gonzalez, Neil (May 9, 2014). "How to Peel an Entire Bulb of Garlic Without Actually Peeling". WonderHowTo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் September 17, 2015.
  2. Laliberte, Marissa (13 February 2017). "How to Peel Garlic in Seconds". Reader's Digest. https://www.rd.com/food/recipes-cooking/how-to-peel-garlic/. 
  3. Description: GB2315990 (A) ― 1998-02-18 - Hand operated garlic peeler, espacenet.com
  4. A Simple Garlic Peeler That Works Almost Too Well, 21 Februarie 1996, Suzanne Hamlin, The New York Times, retrieved at 19 May 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_தோலுரிப்பான்&oldid=3907453" இலிருந்து மீள்விக்கப்பட்டது