பூதங்கண்ணனார்
சங்ககாலப் புலவர்
பூதங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.
அது நற்றிணை 140.
பாடல் சொல்லும் செய்தி
- 'அன்று அவனை அவள் ஏற்கவில்லை. என்றாலும் அவன் மனப்புண்ணுக்கு அவளே மருந்து. இதனை எண்ணிக்கொண்டு சோராமல் பின்தொடர வேண்டும் என்று அவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்'.
அவள்
- 'சந்தனக் கோலாலால் அவள் தன் கூந்தலை வாரிப் புலர்த்திக்கொண்டு தந்தையின் தேர் ஓடும் நிலவுமணல் முற்றத்தில் தன்னைப் பெருங் கண்ணோட்டத்தோடு பேணும் ஆயத்தாரோடு பந்து செல்லும் இடமெல்லாம் ஓடி ஆடுகிறாள்'.
- 'பந்து செல்லுமிடமெல்லாம் ஓடுபவள் என் உள்ள ஓட்டத்துக்கு மட்டும் பரிவுகூடக் காட்டவில்லை. அதற்காக அவளைப் பின்தொடராமல் விட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறான்'.