பூதஞ்சேந்தனார்
இனியவை நாற்பது என்ற தொகுதியை பாடியவர்
பூதஞ்சேந்தனார் எனப்படும் இவரின் இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார்; இந்தப் பூதனார் மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இவரை மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர்.[1]
இனியவை நாற்பது என்ற தொகுதியை பாடியவர் இவர்.
இவர் வாழ்ந்த நாடு பாண்டிய நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aranoolgal-I". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.