பூந்தளிர் (இலங்கை இதழ்)

பூந்தளிர் இலங்கையில் மாவனல்லை எனுமிடத்திலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு முத்திங்கள் கலை இலக்கிய இதழாகும். இவ்விதழின் முதல் இதழ் 1987ம் ஆண்டில் வெளிவந்தது. விலை ரூபாய் 4.00

பணிக்கூற்றுதொகு

இன்றைய இளைய எழுத்தாளர்களின் இலக்கியத் தாகத்தை இனிதே இன்புறச் செய்கின்றது இவ்வினிய இலக்கிய ஏடு

ஆசிரியர்தொகு

  • ரிசா யூசுப்

உள்ளடக்கம்தொகு

இதுவொரு கலை இலக்கிய சஞ்சிகை என்றடிப்படையில் சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், சிந்தனைத்துளிர்கள் போன்ற பல்சுவை அம்சங்களும், மாணவர்களுக்கான கல்வியியல் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.