பூனைக்கு பிடித்தமான செடி
நெபெட்டா கேடாரியா,என்பது லாமியேசி குடும்பத்தில் உள்ள நெபெட்டா இனத்தைச் சேர்ந்த புதினா வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது கேட்னிப், கேட்ஸ்வார்ட், கேட்வர்ட் மற்றும் கேட்மின்ட் என்றும் அழைக்கப்படுகிறது, இத்தாவரம் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் சீனாவின் சில பகுதிகளைச் பூர்விகமாகக் கொண்டாலும் வடக்கு ஐரோப்பா, நியூசிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. [1][2][3][4][5]கேட்மின்ட் என்ற பொதுவான பெயர் அதன் ஒட்டுமொத்த பேரினத்தையும் குறிக்க பயன்படுகிறது.
பூனைக்கு பிடித்தமான செடி | |
---|---|
கேட்னிப் பூக்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Nepeta |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/NepetaN. cataria
|
இருசொற் பெயரீடு | |
Nepeta cataria L.[1] |
பெயர்க்காரணம்
தொகுஇத்தாவரத்திற்கு கேட்னிப் மற்றும் கேட்மின்ட் என்ற பெயர்கள் மூன்றில் இரண்டு பங்கு பூனைகள் அதன் மீது கொண்டிருக்கும் தீவிர ஈர்ப்பு மற்றும் அந்த தாவரத்திற்க்கு ஆற்றும் எதிர்வினை போன்றவற்றால் பெயரிடப்பட்டுள்ளது.[6][7] கேட்னிப் தாவரமானது சில மூலிகை தேநீர் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளாகவும் உள்ளது, மேலும் இதன் மயக்க மருந்து மற்றும் தளர்வு பண்புகளுக்காக மதிப்பிடப்படுகிறது.[8]
செடியின் அமைவு
தொகுஇதாவரம் 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியதாகும். இதய வடிவத்தில் இருக்கும் இதனுடைய இலையும், தண்டும் வாசனை உடையது.[9] இதன் வாசனை பூனைக்கு மிகவும் பிடித்தமானது.குறிப்பாக இதன் காய்ந்து போன இலையின் வாசனையால் பூனைகள் வசீகரிக்கப்படும் மேலும் இதனுடைய வாசனையை வைத்து சிறுத்தை, புலி போன்ற பூனை வகையைச் சேர்ந்த விலங்குகளை பிடிக்க முடியும். இந்த செடியின் வாசனை பூனைகளை கவர்ந்திழுப்பதால் இதனை பூனையை வசீகரிக்கும் செடி என்றும் அழைக்கிறார்கள்.
இத்தாவரம் சிறிய, இருமுனை மலர்களும் மிகுந்த மணம் கொண்டவை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது வெளிர் ஊதா நிறத்தின் மெல்லிய புள்ளிகளுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும்..[10]
பயன்கள்
தொகுநெபெட்டா கேட்டேரியா மலர்தோட்டங்களில் பயன்படுத்த, ஒரு அலங்கார தாவரமாக பெரும்பாலும் பயிரிடப்படுகிறது. மேலும் பூனைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை வளர்ப்பவர்கள், இதன் ஈர்க்கும் குணங்களுக்காகவும் வளர்க்கப்படுகிறது.[10]
கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு மூலம் இத்தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் நெபெட்டலாக்டோன் கொசு மற்றும் ஈ போன்றவைகளை விரட்டியடிக்கும் இயற்கை விரட்டியாகும். [11][12] இந்த எண்ணெய் பூச்சிகளுக்கு, குறிப்பாக கொசுக்கள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் ஆகியவற்றிற்கு எதிராக மிகவும் பயனுள்ள இடஞ்சார்ந்த விரட்டியாகும்.[13][14][15]
இதனுடைய காய்ந்த இலையை மூலிகை தேநீர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். காரத்தன்மை உடைய இந்த தேநீர் சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1
- USDA, ARS, GRIN. பூனைக்கு பிடித்தமான செடி in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம்.
- ↑ World Checklist of Selected Plant Families: Royal Botanic Gardens, Kew
- ↑ Flora of China Vol. 17 p. 107 荆芥属 jing jie shu Nepeta Linnaeus, Sp. Pl. 2: 570. 1753.
- ↑ Altervista Flora Italiana, genere Nepeta includes photos plus range maps for Europe and North America
- ↑ Wilson, Julia. "Catnip (Nepeta cataria) – Everything You Need to Know About Catnip!". Cat-World.com.au. Archived from the original on 6 February 2015. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
- ↑ Bol, Sebastiaan (16 March 2017). "Responsiveness of cats (Felidae) to silver vine (Actinidia polygama), Tatarian honeysuckle (Lonicera tatarica), valerian (Valeriana officinalis) and catnip (Nepeta cataria)". BMC Veterinary Research 13 (1): 70. doi:10.1186/s12917-017-0987-6. பப்மெட்:28302120.
- ↑ "Catnip (Nepeta cataria) – Everything You Need to Know About Catnip!". Cat-World.com.au. Cat World. 2014. Archived from the original on 6 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
- ↑ Grognet, Jeff (1990). "Catnip: Its uses and effects, past and present". The Canadian Veterinary Journal 31 (6): 455–456. பப்மெட்:17423611.
- ↑ "UW-Stevens Point Freckmann Herbarium: Family Genera". Archived from the original on 14 October 2013. பார்க்கப்பட்ட நாள் 11 August 2013.
- ↑ 10.0 10.1 Missouri Botanical Garden: Nepeta cataria (Catmint) . Retrieved 1 October 2013
- ↑ Kingsley, Danny (3 September 2001). "Catnip sends mozzies flying". ABC Science Online. பார்க்கப்பட்ட நாள் 14 February 2009.
- ↑ Junwei J. Zhu, Christopher A. Dunlap, Robert W. Behle, Dennis R. Berkebile, Brian Wienhold. (2010). Repellency of a wax-based catnip-oil formulation against stable flies. Journal of Agricultural and Food Chemistry, 58 (23): 12320–12326 (8 Nov 2010, எஆசு:10.1021/jf102811k).
- ↑ Schultz, Gretchen; Peterson, Chris; Coats, Joel (2006). "Natural Insect Repellents: Activity against Mosquitoes and Cockroaches" (PDF). In Rimando, Agnes M.; Duke, Stephen O. (eds.). Natural Products for Pest Management. ACS Symposium Series. American Chemical Society.
- ↑ "Termites Repelled by Catnip Oil". Southern Research Station, United States Department of Agriculture – Forest Service. 26 March 2003.
- ↑ "Catnip Repels Mosquitoes More Effectively Than DEE". ScienceDaily.com. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.