பூப்பறிக்க வருகிறோம்

சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று

பூப்பறிக்க வருகிறோம் என்பது சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

பூப்பறிக்க வருகிறோம் கோட்டுருப் படம்

ஆடும் முறை

தொகு

இரண்டு அணிகள் இருக்கும். அவற்றுக்கிடையே ஒரு கோடு வரையப்பட்டிருக்கும். ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருவர் அந்த நடுக்கோட்டுக்கு அருகில் வருவர். அவர்கள் அடுத்தவரைத் தம் பக்கம் இழுப்பர். யார் நடுக்கோட்டைத் தாண்டி இழுக்கப்படுகிறாரோ அவர் இழுக்கப்பட்ட பக்கம் உள்ள அணியில் சேர்ந்துகொள்வார். அந்த அணிக்காக அவரும் இழுக்க வரலாம்.

பூப் பறிக்கச் செல்லும் முறைமை இரு அணிகளுக்கும் மாறிமாறி வழங்கப்படும். எந்த அணியில் ஒருவர்கூட மிஞ்சாமல் இழுக்கப்பட்டுவிடுகிறார்களோ அந்த அணி தோற்ற அணி.

ஆட்டத்தின் போது உரையாடலாகப் பாடப்படும் பாட்டு

பூப்பறிக்க வருகிறோம்
யாரை அனுப்புகிறீர்
அருக்காணியை அனுப்புகிறோம் (இழுக்க வருபவர் பெயர்)
யாரைப் பறிக்கிறார்
மல்லிகாவைப் பறிக்கிறார் (இழுக்கப்படுபவர் பெயர்)
சண்டை வரப் போகுது
மண்டை உடையப் போகுது

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூப்பறிக்க_வருகிறோம்&oldid=1792844" இலிருந்து மீள்விக்கப்பட்டது