பூப்பெயர் புணர்ச்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழில் பூப்பெயர்கள் பிற சொற்களுடன் இணைவதைப் பூப்பெயர் புணர்ச்சி எனப்படும்.
நன்னூல் விதி (200)
தொகு"பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்"
விளக்கம்
தொகுமேற்காணும் விதியில் முதலில் இனமென்மையும் என்ற சொல்லில் அமையும் 'உம்' என்ற சொல் பூப்பெயர் புணர்ச்சியில் மெல்லின எழுத்துக்களும் அமையும் என்ற கருத்தைக் மையப்படுத்துகிறது அதன்படி பூ+கொடி என்பது பூக்கொடி என வல்லொற்றைக் கொண்டு புணரும் மேற்காணும் விதிப்படி பூங்கொடி என மெல்லின மெய்யுடன் புணர்வதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
பிற எடுத்துக்காட்டுகள்
தொகுபூ+சோலை = பூஞ்சோலை
பூ+காற்று = பூங்காற்று
பூ+சாணம் = பூஞ்சாணம்
பூ+செடி = பூச்செடி
கருவி நூல்
தொகுநன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ.தாமோதரன் அவர்களின் பதிப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்