நிலநடுக் கோடு

(பூமத்தியரேகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

.

நிலநடுக்கோடு, உலகப் படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. மக்கள் வாழும் பகுதிகளில் தென் அமெரிக்காவின் மிகப்பெரும் பகுதியும், ஆப்பிரிக்காவின் கணிசமான பகுதியும், ஆசுத்திரேலியா நியூசிலாந்து முழுவதும் நில நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ளன. இந்தியா உள்ளிட்ட ஆசியாவின் பெரும் பகுதியும், வட அமெரிக்கா ஐரோப்பா முழுவதும் நிலநடுக்கோட்டிற்கு வடக்கே உள்ளன.

நில நடுக்கோடு அல்லது புவிமையக் கோடு (பூமத்தியரேகை, Equator) என்பது நில உருண்டை (பூமி) சுழலும் அச்சின் வட முனை, தென் முனை ஆகியவற்றுக்குச் சம அளவான தொலைவில் நில உருண்டையைச் சுற்றி இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒரு கற்பனைக் கோடு ஆகும். இது பூ மத்திய கோடு என்றும் சில வேளைகளில் வெறுமனே மத்திய கோடு என்றும் அழைக்கப்படுவதுண்டு. நிலநடுக்கோடு (புவி மையக்கோடு) நில உருண்டையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. இக்கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதி வட அரைக்கோளம் என்றும் தெற்கேயுள்ளது தென் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றது. நிலநடுக்கோட்டின் (புவிமையக் கோட்டின்) நிலநேர்க் கோட்டு அளவு 0° வடக்கு ஆகும். இக்கோட்டின் மொத்த நீளம் ஏறத்தாழ 40,075 கிமீ (24,901.5 மைல்கள்)ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநடுக்_கோடு&oldid=4046012" இலிருந்து மீள்விக்கப்பட்டது