பூம்பட்டா

மலையாள வரைகலை இதழ்

பூம்பட்டா (Poompatta) என்பது ஓர் மலையாள வரைகலை பத்திரிகையாகும். இது 1964இல் வெளிவரத் தொடங்கியது.[1] இது ஆரம்பத்தில் பி. ஏ. வாரியர் என்பவருக்கும் பின்னர் பை அன்ட் பை நிறுவனத்திற்கும் சொந்தமானது.

பூம்பட்டா
வகை
  • குழந்தைகள் பத்திரிக்கை
  • வரைகலை புத்தகம்
இடைவெளிவாரமிருமுறை (தற்போது)
தொடங்கப்பட்ட ஆண்டு1964
நாடுஇந்தியா
அமைவிடம்கேரளா
மொழி[மலையாளம்]]

பூம்பட்டா "மலையாளத்தில் முன்னோடி குழந்தைகள் இதழ்களில் ஒன்றாக" கருதப்படுகிறது. என். எம். மோகன் (1978-82), ஆர்.கோபாலகிருஷ்ணன் (1982-1986) போன்ற பிரபல மலையாள குழந்தைகள் எழுத்தாளர்கள் 1980களில் பத்திரிகையின் ஆசிரியர்களாக பணியாற்றினர்.[2] 1980களின் நடுப்பகுதியில் பலராமன் இதழின் எழுச்சிக்கு முன், இது மலையாள வரைகலை பத்திரிகைகளில் முக்கிய இடத்திலிருந்தது. இப்போது பத்திரிகை சூரியபிரபா பதிப்பகத்தால் திருச்சூரிலிருந்து வெளியிடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. The Indian P.E.N. 1967. பார்க்கப்பட்ட நாள் 6 March 2013.
  2. Encyclopaedia of Indian Literature: A-Devo - Amaresh Datta. பார்க்கப்பட்ட நாள் 6 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்பட்டா&oldid=3210605" இலிருந்து மீள்விக்கப்பட்டது