பூம்புகார் விருது

பூம்புகார் விருது அல்லது பூம்புகார் மாநில விருது என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த கைவினைப் பொருள்களைத் தயாரிக்கும் கை வினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டு தோறும் வழங்கப்படும் தமிழக அரசின் விருதாகும். 2002 ஆம் ஆண்டு முதல் இவ்விருதுக்கு ’மாநில விருது’ என்ற தரம் அளிக்கப்பட்டது.[1] இவ்விருதுக்கு 16 விதமான கைத்திறன் தொழில் செய்யும், 65 வயதுக்கு மேற்பட்ட பத்து சிறந்த கை வினைஞர்களைத் தேர்ந்தெடுத்து, தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்[2]

விருதுக்குரிய கைத்திறன் தொழில்கள்

தொகு

பஞ்சலோக சிற்பங்கள், பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை கலைப்பொருள்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், மரச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுகளிமண், கலம்காரி, பத்திக், அப்ளிக் துணி ஓவியங்கள், காகிதக் கூழ் பொம்மைகள், பாய் நெசவு, மூங்கில் மற்றும் பனை ஓலைப் பொருள்கள், நெட்டி வேலை, நார்ப் பொருள்கள், கோவில் நகைகள், சித்திரத் தையல் வேலை மற்றும் இதர கைவினைப் பொருள்கள்.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்புகார்_விருது&oldid=4056391" இலிருந்து மீள்விக்கப்பட்டது