பூவை கலியாணசுந்தர முதலியார்
பூவை கலியாணசுந்தர முதலியார் என்பவர் ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்யும் அஷ்டாவதானம் எனும் கலையில் தேர்ச்சி பெற்றவர். தமிழ், சித்தாந்தப் புலமை மிக்கவர்.
இளமையும் கல்வியும்
தொகுபூவை கலியாணசுந்தர முதலியார் அண்ணாசுவாமி-உண்ணாமுலை ஆகியோர்க்கு 1854 ஆம் ஆண்டு,மே மாதம் 5 ஆம் நாளில் பிறந்தார். பூவிருந்தவல்லியில் தொடக்கக் கல்வியை முடித்தார். 1869 இல் சென்னை பச்சையப்பன் பாடசாலையில் தமிழும் ஆங்கிலமும் கற்றார். சைவ சித்தாந்தத்தை இராமலிங்கத் தம்பிரானிடம் பயின்றார். 1875 முதல் செங்கல்பட்டு மிஷன் பாடசாலையில் பயின்றார். அங்கு பேறை ஜெகந்நாதப் பிள்ளையிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றார்.
இதழ்ப்பணியும், நூற்பணியும்
தொகுசித்தாந்தம் எனும் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, அவ்விதழில் சித்தாந்தச் சாத்திரக் கருத்துகள் பலவற்றை எளிய நடையில் எழுதினார். சென்னையில் மெய்கண்ட சந்தானசபை என்ற சபையை நிறுவி, அதன்வழி நூல்நிலையம் ஒன்றை அமைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய இவர் அச்சிட்ட நூல்கள் 96. இந்து தேச சரித்திரத்தையும், இந்திய பீனல்கோடு சட்டத்தையும் முறையே 700, 500 விருத்தங்களால் பாடி, பரத கண்ட இதிகாசம், நீதி சாகரம் எனப் பெயரிட்டார்.
- செங்கல்பட்டு சுந்தர விநாயகர் பதிகம்
- திருவான்மியூர்ப் புராணம்
- ஏகாம்பரேசர் பதிகம்
- காமாட்சியம்மன் பதிகம்
- சித்தாந்தக்கட்டளை
முதலான பல நூல்கள் இயற்றியுள்ளார்.
இறப்பு
தொகுவாழ்வின் இறுதியில், காஞ்சிபுரம் ஞானப்பிரகாச சுவாமிகளிடம் துறவு மேற்கொண்டு, கலியாணசுந்தர யதீந்தரர் என்ற பெயருடன் துறவியாக வாழ்ந்தார்.1918 ஆம் ஆண்டு இறந்தார்.
உசாத்துணை
தொகு- பெரியபெருமாள்," தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்" மதி நிலையம்-2009.
- நூல்:தமிழ்ப் புலவர் பெருமக்கள்- ஆசிரியர்:வித்துவான் டி. கண்ணம்மாள்
- tamilandvedas.com