பெக்கெரலைட்டு
யுரேனைல் ஐதராக்சைடு கனிமம்
பெக்கெரலைட்டு (Becquerelite) என்பது Ca(UO2)6O4(OH)6•8(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். யுரேனியத்தின் கனிமம் என்று இது வகைப்பட்டுத்தப்படுகிறது. இரண்டாம்நிலை கனிமமான இதில் கால்சியம் கலந்துள்ளது. பெக்கெரலைட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் மோவின் அளவுகோலில் கடினத்தன்மை 2 என்ற மதிப்புடன் காணப்படுகிறது.
பெக்கெரலைட்டு Becquerelite | |
---|---|
பழைய சின்கோலோப்வே சுரங்கத்திலிருந்து யுரேனோஃபேன் ஊசிகளுடன் பெக்கரலைட் படிகங்களின் தெளிப்பு | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca(UO2)6O4(OH)6•8(H2O) |
இனங்காணல் | |
படிக இயல்பு | போலி அறுகோண வெளிக்கோடை படுவெளிப்படுத்தும் அட்டவணைப் படிக தெளிப்பு படிகங்கள்; பூச்சுகள் மற்றும் சிறந்த பொதிகள் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
பிளப்பு | {001} இல் தெளிவு; {101} {010} மற்றும் {110} இல் தெளிவில்லை, |
விகுவுத் தன்மை | னொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
கீற்றுவண்ணம் | மஞ்சள் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 5.09 - 5.2 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.725 - 1.735 nβ = 1.815 - 1.825 nγ = 1.825 - 1.830 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.100 |
பலதிசை வண்ணப்படிகமை | X = நிறமற்றது முதல் வெளிர் மஞ்சள் வரை, Y = Z = மஞ்சள் முதல் ஆழ் மஞ்சள் வரை |
2V கோணம் | அளக்கப்பட்டது: 32° |
பொதுவான மாசுகள் | பொதுவாக ஈயம் கலந்திருக்கும் |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
1896 ஆம் ஆண்டு கதிரியக்கத்தன்மையைக் கண்டுபிடித்த பிரெஞ்சு இயற்பியலாளர் அன்டோயின் என்றி பெக்கெரலை (1852-1908) சிறப்பிப்பதற்காக கனிமத்திற்கு பெக்கெரலைட்டு எனப் பெயரிடப்பட்டது. பெக்கெரலைட்டின் எடையில் 70% யுரேனியம் உள்ளது.
முன்னதாக சையர் என்றழைக்கப்பட்ட காங்கோ மக்களாட்சிக் குடியரசுவின் கசோலோவில் பெக்கெரலைட்டு கனிமம் வெட்டியெடுக்கப்படுகிறது.