பேக்குரெல் அலல்து பெக்கெரல் ( becquerel (குறி Bq) என்பது கதிரியக்கத்தின் அளவை அளவிடப் பயன்படும் அனைத்துலக முறை அலகுகள் வழி தருவித்த ஓர் அலகு. ஒரு பெக்கெரல் என்பது ஒரு நொடியில் ஓர் அணுக்கருத் துகள் சிதையும் விளைவால் ஏற்படும் கதிரியக்க விளைவைக் குறிக்கும். எனவே இதன் பண்பலகு நொடி−1 (தலைகீழ் நொடி அல்லது நொடி கீழ்வாயாக இருத்தல்) ஆகும் . இந்த பெக்கரல் என்னும் அலகின் பெயர் பியர் கியூரி, மாரீ கியூரியுடன் தானும் 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற என்றி பெக்கரல் என்பவரின் பெயரால் வழங்குகின்றது. கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட நிறை (திணிவு) உள்ள கதிரியக்கப் பொருளில் இருந்து வெளியாகும் பெக்கரல் அளவு காலத்தால் மாறுபடும். எனவே குறைந்த நேரமே இயங்கும் ஓரிடத்தான்கள் (ஐசோடொப்புகள்) நேரம் பதிவிட்டுக் குறிப்பிடப்பெறும், இதைக்கொண்டு முன்போ பின்போ தேவைப்படும் காலத்தைக் கணக்கிடலாம். சராசரி மாந்த உடலில் இருந்து பொட்டாசியம்-40 என்னும் கதிரியக்க ஓரிடத்தாலில் இருந்து 4400 பெக்கரல் வெளியாகின்றது. இது இயற்கையாகக் கிடைக்கும் கதிரியக்க ஓரிடத்தான் (இதன் அரைவாழ்வு 1.248×109 ஆண்டுகள் ஆகும்)

முன்னொட்டுகள்

தொகு

SI அலகு Bq என்பதோடு வழக்கமான முன்னொட்டுகள் சேர்க்கலாம். எ. கா kBq (kilobecquerel) என்பது ஆயிரம் பெக்கரல் (103 Bq), மெகா பெக்கரல் MBq (megabecquerel, 106 Bq), கிகா பெக்கரல் GBq (gigabecquerel, 109 Bq), டெரா பெகக்ரல் TBq (terabecquerel, 1012 Bq), and பீட்டா பெக்கரல், PBq (petabecquerel, 1015 Bq). பொது வழக்கில் 1 Bq என்பது மிகவும் சிறிய அளவு, எனவே முன்னொட்டுகள் மிகவும் பயனபடுவன. மேலே குறிப்பிட்டவாறு இயற்கையில் இருக்கும் பொட்டாசியம்(40K) என்பது மாந்த உடலில் இருந்து வெளிவருவது. இது நொடிக்கும் 4000 சிதைவுகள் என்பதைக் காட்டுகின்றது [1] இரோசிமா நாகாசாகியில் வெடித்த அணுகுண்டின் விளைவால் வெளியானது (14 kt or 59 TJ) என்பதாகும். இது 8x1024 Bq ( அதாவது 8 Y Bq = 8 யோட்டா பெக்கரல் (yottabecquerel).[2]

கியூரி என்னும் அலகுடன் ஒப்பீடு

தொகு

ஒரு கியூரி(Ci) என்பது SI அலகு சாராத பழைய அலகாகும். இது ஒரு கிராம் அளவு ரேடியம்-226 என்னும் ஓரிடத்தானின் கதிரியக்கம் ஆகும். ஒரு கியூரி என்னும் அலகு பெக்கரல் அளவைவிட மிகப்பெரியது. ஒரு கியூரி என்னும் கதிரியக்கம் 37 பில்லியன் பெக்கரலுக்கு ஈடு (37 கிகா பெக்கரல்).

அலகு மாற்ற வாய்பாடுகள்:

1 Ci = 3.7×1010 Bq
1 Ci = 37 GBq
1 μCi = 37,000 Bq
1 Bq = 2.70×10−11 Ci
1 Bq = 2.70×10−5 μCi
1 GBq = 0.0270 Ci

வரையறை

தொகு

1 Bq = 1 s−1

கதிரியக்கக் கணக்கீடு

தொகு

  (கிராம்/மோல், g/mol அளவில்) அணுநிறையும்,   (நொடிகளில்) அரைவாழ்வும் கொண்ட,   (கிராம் கணக்கில்) நிறை அளவான ஓரிடத்தானின் கதிரியக்கம் கீழ்க்காணுமாறு அளவிடப்படும்:

கதிரியக்கம் (Bq அளவில்) =  

இதில்  =6.022 141 79(30)×1023 mol−1 என்பது அவோகாடரோ எண்.

எடுத்துக்காட்டாக , ஒரு கிலோகிராம் பொட்டாசியம் 0.12 கிராம் 40K கொண்டிருக்கும் (all மற்ற எல்லா ஓரிடத்தான்களும் நிலையானவை), இதன் அரைவாழ்வு   = 1.248×109years=39.38388×1015 நொடிகள், இதன் அணுநிறை 39.96399848 g/mol, எனவே இதன் கதிரியக்கம் 31.825 kBq.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கெரல்&oldid=2745300" இலிருந்து மீள்விக்கப்பட்டது