பெங்களூர்க் கோட்டை
பெங்களூர்க் கோட்டை கெம்பேகௌடா என்பவரால் கட்டப்பட்ட களிமண்ணால் ஆன கோட்டையாகும். பின்னர் 1761-இல் இது ஐதர் அலியால் கற்கோட்டையாக மேம்படுத்தப்பட்டது. இக்கோட்டை 1791-இல் நடந்த மூன்றாம் மைசூர்ப் போரில் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.
தற்போது கோட்டையின் தில்லி வாசல் மட்டுமே எஞ்சியுள்ளது.