பெட்டி ஃப்ரீடன்

பெட்டி பிரீடன் (அ) பெட்டி ஃப்ரீடன் (Betty Friedan, பெப்ரவரி 4, 1921 – பெப்ரவரி 4, 2006) அமெரிக்க எழுத்தாளரும் செயற்பாட்டாளரும் பெண்ணியவாதியும், அமெரிக்காவின் பெண்கள் விடுதலைப் போராட்டத்தைத் துவக்கியவர்களில் ஒருவரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் மகளிர் இயக்கத்தில் முன்னணி வகித்தார். 1966 இல் பெண்களுக்கான தேசிய சமூகத்தை அமெரிக்காவில் துவக்கியவர்.[1]. 1963இல் அவர் எழுதிய ’பெண்மை வட்டம்’ (தி பெமினைன் மிஸ்டிக்) என்ற நூல் 20வது நூற்றாண்டில் இரண்டாம் அலை வீசக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது[2].

பெட்டி ஃப்ரீடன்
1960இல் பெட்டி பிரீடன்
பிறப்புபெட்டி நவோமி கோல்டுசுட்டீன்
பெப்ரவரி 4, 1921
பியோரியா, இலினொய், அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 4, 2006(2006-02-04) (அகவை 85)
வாசிங்டன், அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
குருதித்தேக்க இதயத் திறனிழப்பு
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுபெண்ணியம், அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராட்டம்
வாழ்க்கைத்
துணை
கார்ல் பிரீடன் (1947–69; மணமுறிவு)

1966இல், பிரீடன் மகளிருக்கான தேசிய அமைப்பை (NOW) நிறுவி அதன் முதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]. இந்த அமைப்பின் நோக்கம் பெண்களை " இப்போது பெரும்போக்கு அமெரிக்க சமூகத்தில் ஆண்களுக்கு முழுவதும் சரிசமனான பங்காளியாக" கொண்டுவருவதாகும். பெட்டி பிரீடன் தனது செயற்பாடுகளுக்காகப் பல விருதுகளும் பெற்றவர்.

1981 ஆம் ஆண்டில் வெளியான ’இரண்டாவது கட்டம்’ எனும் இவரது புத்தகம் இருபது ஆண்டுகளாக நடந்து வந்த பெண்கள் போராட்டத்தின் விளைவுகளை ஆராய்ந்தது. சமுதாய, பொருளாதார மாற்றங்கள் மட்டுமே அப்போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது என்றும் தன்மானமும் தனித்தன்மையும் ஏற்படவில்லை என்றும் அதற்கு பதில் குடும்பப் பிரச்சனைகள், குழந்தைகள் புறக்கணிப்பு ஆகியவையே நடந்துள்ளன என்றும் அன்பின் குறைவால் குடும்பங்கள் தவிக்கின்றன இந்நூலில் பெட்டி ஃப்ரீடன் குறிப்பிடுகின்றார்[1].

இரண்டாவது கட்டம் நூலில், ’பெண்கள் போராட்டத்தின் இந்த பிடிவாதமான, தன்னலம் மிக்க சண்டைகளால், வார்த்தை ஜாலங்களால் நான் சோர்வடைந்துவிட்டேன்..என்னை விட்டுப் பிரியாத ஓர் இனம் புரியாத சஞ்சலத்தால் சிரமப்படுகிறேன்’ என்று தமது மனநிலையை குறிப்பிடுகின்றார்[1].

தனிவாழ்க்கை

தொகு

பிரீடன் 1947இல் கார்ல் பிரீடனை திருமணம் புரிந்தார்[4]. தனது 86 வது அகவையில் இதயத் திறனிழப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 நவீன பெண்மணிகள்; சுவாமி ரங்கநாதானந்தர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 2-15;
  2. "National Women's Hall of Fame - Women of the Hall". greatwomen.org. பார்க்கப்பட்ட நாள் 27 November 2010.
  3. "Betty Friedan, Who Ignited Cause in 'Feminine Mystique,' Dies at 85 - New York Times". nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2010.
  4. http://www.biography.com/people/betty-friedan-9302633
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டி_ஃப்ரீடன்&oldid=2716205" இலிருந்து மீள்விக்கப்பட்டது