பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை
பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (ஆங்கிலம்: The Convention on the Elimination of all Forms of Discrimination against Women (CEDAW)) என்பது 1979 இல் ஐக்கிய நாடுகள் பொது அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் அனைத்துலக உடன்படிக்கை ஆகும். பெண்கள் உரிமைகளுக்கான சட்டங்களை கொண்டதாக விபரிக்கப்பட்ட இந்த உடன்படிக்கை 1981 இல் அமுலுக்கு வந்தது. இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும் உறுப்புநாடுகள் பால் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் தமது உள்நாட்டு சட்டங்களை வடிவமைக்க வேண்டும், பால் அடிப்படையிலான பாகுப்பாட்டைக் கொண்ட சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும், பெண்களுக்கு எதிரான பாகுப்பாட்டை தடுக்கும் வண்ணம் புதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.