பெண்குறி (ஆங்கில மொழி: Vulva) பெண் பாலூட்டியின் வெளிப்புறமுள்ள இனப் பெருக்க உறுப்புகளில் ஒன்றாகும்.[1] பிற பாலூட்டிகளுக்கும் இதே போன்ற வடிவமைப்பு இருப்பினும் இங்கு குறிப்பாக மனித இனப் பெண்குறி பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

மனிதப் பெண்குறி
Human vulva
பெண்களின் பெண்குறி (அந்தரங்க முடி மழிக்கப்பட்டது)
விளக்கங்கள்
முன்னோடிGenital tubercle, urogenital folds
தமனிInternal pudendal artery
சிரைInternal pudendal veins
நரம்புPudendal nerve
நிணநீர்Superficial inguinal lymph nodes
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்pudendum muliebre
MeSHD014844
TA98A09.2.01.001
TA23547
FMA20462
உடற்கூற்றியல்

பெண்குறியில் பல பெரிய மற்றும் சிறிய உடற்கூற்று அமைப்புகள் அடங்கி உள்ளன; மேல்/கீழ் இதழ்கள், பூப்பு வெளி, பெண்குறிக் காம்பு, இடைகழிகள், இடைகழி நாளங்கள் மற்றும் புணர்புழையின் துளை ஆகியன சிலவாகும். இதன் வளர்ச்சி பல நிலைகளாக நிகழ்கிறது; முதன்மையாக முதிர்கரு காலத்திலும் பூப்படையும் பருவத்திலும் நிகழ்கின்றன. கருப்பையின் வெளிவாசலாக இருப்பதால் இதனை இரட்டைக் கதவுகளால் காக்கிறது: பெரிய மேல் இதழ் மற்றும் சிறிய உள் இதழ். தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் புணர்புழை உடல்நலத்திற்கு உதவ நுண்ணுயிர்களை உள்ளிருந்து வெளியேற்றுகிறது. எனவே பெண்குறியை வெளிப்புறமாக சுத்தம் செய்தாலே பிறப்புறுப்புப் பகுதி சுகாதாரம் பேணப்படும்.

பெண்குறி பாலுறவின்போது பங்காற்றுகிறது; இப்பகுதி உறுப்புகள் அனைத்துமே நெருக்கமான நரம்புப் பிணைப்புக்களைக் கொண்டு சரியான முறையில் தூண்டப்பட்டால் சிற்றின்ப சுகம் தருகின்றன. கலையின் பல வடிவங்களிலும் பெண்குறி உயிர் தரும் சக்தியாகவும் பாலின்பம் வழங்கும் சக்தியாகவும் விவரிக்கப்பட்டுள்ளன.[2]

பெண்குறி பெண்ணின் சிறுநீர்க்குழாயின் துளையையும் கொண்டிருப்பதால் சிறுநீர் கழிக்கும் உயிர்வாழ் செயல்பாட்டையும் கொண்டுள்ளது.

அமைப்பு தொகு

மேலும் காண்க தொகு

பாலியல் விழிப்புணர்ச்சி தொகு

மேற்கோள்கள் தொகு

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் vulva
  2. Lerner, Harriet (2003). "'V' is for vulva, not just vagina". The Lawrence Journal-World. பார்க்கப்பட்ட நாள் 1 August 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்குறி&oldid=3829704" இலிருந்து மீள்விக்கப்பட்டது