பெண்டகோனைட்டு
.
பெண்டகோனைட்டு Pentagonite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca(VO)Si4O10·4(H2O) |
இனங்காணல் | |
நிறம் | பசும்நீலம் |
படிக இயல்பு | பட்டகம் போன்ற படிகங்கள், பெரும்பாலும் கதிரியக்க தொகுதிகள் |
படிக அமைப்பு | நேர்சாய் சதுரம் |
இரட்டைப் படிகமுறல் | பல இரட்டைகள் எனவே போலி பென்டகோனால் சீர்மை |
பிளப்பு | {010} உல் நன்று |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 - 4 |
மிளிர்வு | பளபளப்பானது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.33 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.533 nβ = 1.544 nγ = 1.547 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.014 |
பலதிசை வண்ணப்படிகமை | பார்க்கலாம்: X=Z= நிறமற்றது Y= நீலம் |
2V கோணம் | அளக்கப்பட்டது: 50° |
மேற்கோள்கள் | [1][2][3] |
பெண்டகோனைட்டு (Pentagonite) என்பது Ca(VO)Si4O10•4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரிய சிலிக்கேட்டு வகை கனிமமாகும். வழக்கத்திற்கு மாறான இரட்டைப் படிக ஐந்து மடிப்பு சமச்சீர் தோற்றத்தில் இருப்பதால் இதற்கு பெண்டகோனைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. கேவன்சைட்டு கனிமத்தினுடைய மறு உருவமாக இது கருதப்படுகிறது [1]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெண்டகோனைட்டு கனிமத்தை Ptg[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
1973 ஆம் ஆண்டு முதன் முதலில் பெண்டகோனைட்டு அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம், மால்கியுவர் மாகாணத்திலுள்ள ஓவிகி மாநில ஏரிப் பூங்காவில் கண்டறியப்பட்டது [1]. இந்தியாவின் பூனா மாவட்டத்திலும் கூட கிடைப்பதாக கூறப்படுகிறது. கேவன்சைட்டு, இயுலான்டைட்டு, சிடில்பைட்டு, அனால்சைம், அப்போபைலைட்டு, கால்சைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து பசால்ட்டு போன்ற சில பாறை வகைகளின் பள்ள நிரப்பியாக இயற்கையில் இது கிடைக்கிறது [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Handbook of Mineralogy
- ↑ Mindat.org
- ↑ Webmin
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.