பெண்டோரைட்டு

சல்பேட்டுக் கனிமம்

பெண்டோரைட்டு (Bentorite) என்பது Ca6(Cr,Al)2(SO4)3(OH)12·26(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். மெல்லிய ஊதா முதல் அடர் ஊதா நிறம் வரையிலான நிறங்களில் இது காணப்படுகிறது. கண்ணாடி பளபளப்புடன் அறுகோணப் படிகங்கள் முதல் இரு அறுகோண இருபட்டைக்கூம்புருவம் வரை வடிவத்துடன் ஒளிபுகும் தன்மை கொண்டதாகவும் பெண்டோரைட்டு படிகமாகிறது. கதிரியக்கப் பண்பு அல்லாத சரியான பிளவுப்படிகமான இது மோவின் அளவுகோலில் 2 என்ற கடினத்தன்மை மதிப்பைக் கொண்டுள்ளது.

இசுரேலில் கிடைத்த பெண்டோரைட்டு கனிமம்

இசுரேல் நாட்டில் சாக்கடலின் மேற்கு எல்லையில் தானியன் காலத்து அட்ரூரியம் பாறைத் தோற்றத்தில் முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு சுலாமிட் கிராசு என்பவரால் விவரிக்கப்பட்டது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) மற்றும் எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் இரண்டிலும் நிலவியல் மற்றும் கனிமவியல் பேராசியராகப் பணிபுரிந்த யாக்கோவ் பென்-டோர் நினைவாக கனிமத்திற்கு பெண்டோரைட்டு என்ற பெயரை சுலாமிட் கிராசு சூட்டினார்[1][2].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்டோரைட்டு&oldid=2952917" இலிருந்து மீள்விக்கப்பட்டது