பெத்தியகோடை ஓணான்

பெத்தியகோடை ஓணான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கலோட்டசு
இனம்:
க. பெத்தியகோடை
இருசொற் பெயரீடு
கலோட்டசு பெத்தியகோடை
அமரசிங்கே மற்றும் பலர், 2014[1]

பெத்தியகோடா முகடில்லா ஓணான் (Calotes pethiyagodai-கலோட்டசு பெத்தியகோடை) என்பது இலங்கையில் காணப்படும் ஓர் ஓந்தி பல்லியாகும்.[1][2] உள்ளூர் பெயரானது පෙතියාගොඩගේ නොසිලු කටුස්සා (Pethiyagodage nosilu cutussa).[2][3]

விளக்கம்

தொகு

இலங்கையின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உரோகன் பெத்தியகோடாவின் பங்களிப்புக்காக அவரை கவுரவிக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சிற்றினத்திற்கு "பெத்தியகோடத்தின் முகடில்லாத பல்லி" என்று பெயரிட்டனர். இந்தச் சிற்றினம் முன்பு கலோடசு லியோசெபாலசு என்று தவறாக அடையாளம் காணப்பட்டது. ஆனால் க. பெத்தியகோடை ஆண் க. லியோசெபாலசின் ஆண்களைப் போலல்லாமல் குலார் பையினைக் கொண்டிருக்கவில்லை என்றும் செதில்களும் மாறுபாடுகளுடன் காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.[1]

பரவல்

தொகு

பெத்தியகோடை ஓணான் நக்கிள்ஸ் மலைத்தொடருக்குள், 900-1,400 மீ (ID2), 600 உயரத்தில் காணப்படுகிறது. இது வன விளிம்புகளிலும், மரங்களிலும் புதர்களிலும் காணப்படுகிறது.[1]

உணவு

தொகு

பெத்தியகோடை ஓணானின் உணவாகத் தட்டான்பூச்சிகளும் அந்துப்பூச்சிகளும் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Amarasinghe; Karunarathna; Hallermann; Fujinuma; Grillitsch; Campbell (2014). "A new species of the genus Calotes (Squamata: Agamidae) from high elevations of the Knuckles Massif of Sri Lanka". Zootaxa 3785 (1): 59–78. doi:10.11646/zootaxa.3785.1.5. பப்மெட்:24872171. 
  2. 2.0 2.1 Calotes pethiyagodai at the Reptarium.cz Reptile Database. Accessed 23 September 2015.
  3. Bushana Kalhara (26 August 2014). "Pethiyagoda's Crestless Lizard/පෙතියාගොඩගේ කොදු-දැති රහිත කටුස්සා (Calotes pethiyagodai)". Biodiversity of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தியகோடை_ஓணான்&oldid=4043500" இலிருந்து மீள்விக்கப்பட்டது