பெனின்னா  (எபிரேயம்: פְּנִנָּה‎ ) எல்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருவர் .  ஒன்று சாமுவேல் புத்தகத்தில் (1 சாமுவேல் 1:2) குறிப்பிடப்பட்டுள்ள அவரது பெயருக்கு "முத்து", "நகை" அல்லது "பவளம்" என்று பொருள்.

பெனின்னா(வலது), எல்கானா மற்றும் அன்னா ராமாவிலிருந்து திரும்பிய போது .

விவிலிய கூற்று

தொகு

எல்கானா பெனின்னாவை விட தனது மற்றொரு மனைவியாகிய அன்னாளை அதிகமாக நேசித்தார். அன்னாளிற்கு குழந்தை இல்லை. பெனின்னாளிற்கு குழந்தைகள் இருந்தது. அதனால் பெனின்னாள் அன்னாளிற்கு துக்கத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தினார். ஒவ்வொரு வருடமும், எல்க்கானா சீலோவில் பலி செலுத்தியபோது, இறைச்சியின் பங்கைப் பகிர்ந்துகொண்டுப்பார் அன்னாளுக்கு இரு பங்கு கொடுப்பார் . இது பெனின்னாவின் பொறாமையை தூண்டியது.பெனின்னாள் அன்னாளுக்கு குழந்தை இல்லாததற்காக அன்னாளை  தூஷித்தாள் . சாதாரண தினசரி நடவடிக்கைகளிளும் அன்னாளை  துக்கப்படுத்தி, நாள் முழுவதும், அவர்களுக்கு இடையேயான வித்தியாசத்தை அவளுக்கு ஞாபகப்படுத்திக் கோண்டு வேதனையளித்தார் .

யூத எழுத்தாளர் லிலியன் க்ளீன் கூறுகையில், "வாசகரின் அனுதாபங்கள் குழந்தை இல்லாத அன்னாவை நோக்கி செலுத்தப்படுவதால், பெனின்னா தீங்கிழைக்கிற பெண்ணாகக் காணப்படுகிறாள் .[1]

இறுதியில்,  அவரது ஆற்றொணா பிரார்த்தனைக்கு பதில் கிடைத்து. அன்னாள் கர்ப்பம் அடைந்தாள் . அவள் சாமுவேலைப் பெற்றாள் . அதன் பின் அவள்  மூன்று குமாரரையும்  இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள் . சாமுவேலின் பிறப்புக்குப் பிறகு பெனின்னா மீண்டும் குறிப்பிடப்படவில்லை, ஏலி "எல்க்கானாவையும் அவருடைய மனைவியையும் ஆசீர்வதிப்பார்" என்று 1 சாமுவேல் 2:20 சொல்கிறது .  இது அன்னாளைக் குறிக்கிறது . 

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனின்னா&oldid=2393228" இலிருந்து மீள்விக்கப்பட்டது