பெனோப்ரோபென்
பெனோப்ரோபென் (Fenoprofen) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக தசை, மூட்டழற்சியால் ஏற்படும் வலி , காய்ச்சல், வேறு சிறிய அளவிலான வலிகள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து புரொப்பியோனிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து Nalfon போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]
வேறு வணிகப் பெயர்கள் |
---|
Fenopron. |
மருத்துவப் பயன்பாடு
தொகுபொதுவாக முடக்குவாத மூட்டழற்சி போன்ற மூட்டழற்சியால் ஏற்படும் குறைவான, மிதமான வலி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பெனோப்ரோபென் பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர தேய்மான மூட்டழற்சி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
பக்க விளைவுகள்
தொகுஇம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் சிறுநீரகப்பாதிப்பு, குடற்புண், மலச்சிக்கல் ஆகும். இவற்றைத்தவிர தலைச்சுற்று, தூக்கமின்மை, வியர்த்தல், தோல் அரிப்பு பக்க விளைவுகளும் பெனோப்ரோபென் பயன்பட்டால் ஏற்படும்.
பயன்பாட்டெதிர் நிலைகள்
தொகுஇம்மருந்து குடற்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
- ↑ http://www.rxlist.com