பென்சில் முனை குறைபாடு

பென்சில் முனை குறைபாடு (Pencil point disorder) என்பது தென்னையில் ஏற்படும் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளில் ஒன்றாகும். [1]தண்டின் அடிப்பகுதி பெருத்தும் நுனிப்பகுதி சிறுத்தும் பென்சில் வடிவத்தில் காணப்படும். இலைகளின் என்ணிக்கையும், அளவும் குறைந்ந்து மஞ்சள் நிறமடையும். இதனால் குரும்பைகள் உதிர்ந்து விளைச்சலும் பாதிக்கப்படும்.

சீர் செய்யும் முறை: தேவையான உரத்துடன் போராக்ஸ், துத்தநாக சல்பேட், மெக்னீசியம் சல்பேட், தாமிர சல்பேட் ஆகிய ஒவ்வொன்றும் 225 கிராம் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராமும் 10 லி நீரில் கரைத்து 1.8 மீ அரைவட்ட பாத்தியில் ஊற்ற வேண்டும். நோய் தீவிரமாக தாக்கிய மரங்களை அகற்றி விட வேண்டும்.[2]

சான்றுகள் தொகு

  1. "Plantation Crops: Plant Protection in coconut". ecoursesonline.iasri.res.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
  2. "Horticulture :: Plantation Crops :: Coconut-Disease management". agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சில்_முனை_குறைபாடு&oldid=3596322" இலிருந்து மீள்விக்கப்பட்டது