பென்னிங்டன் பொது நூலகம்
பென்னிங்டன் பொது நூலகம் (Pennington Public Library) இஃது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் அறக்கட்டளை உறுப்பினர்கள் நடத்தும் பொது நூலகம் ஆகும்.
நூலகத்தின் வரலாறு
தொகு1875-இல் அன்றைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம்- திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த பென்னிங்டனால் தொடங்கப்பட்டது. அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது. இந்நூலகத்தில் பழைமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. [1]
துறை வாரியாக பிரிவுகள்
தொகுஇங்குத் தரைத் தளத்தில் வார இதழ்கள்-நாளிதழ்கள் வாசிக்கும் பிரிவு, துறை வாரியாகப் பிரிக்கப்பட்ட தமிழ் நூல்கள் வாசிக்கும் பிரிவு, மற்றும் முதல்தளத்தில் துறை வாரியாகப் பிரிக்கப்பட்ட ஆங்கிலம் நூல்கள் வாசிக்கும் பிரிவு, மாணவர்களுக்கான போட்டித்தேர்வுக்கான நூல்கள் பிரிவு மற்றும் குறிப்பு நகல் எடுக்கும் பகுதி ஆகியன உள்ளன.
நிருவாகம்
தொகுமாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல சிறப்பு அங்கத்தினர்கள் குழு அறக்கட்டளை.
துணை அமைப்புகள்
தொகுபென்னிங்டன் தொடக்கப்பள்ளி நடுவண் கல்வி (C B S E) , மற்றும் பென்னிங்டன் வர்த்தக வளாகம்.