பெப்ரவரி 20, 2009 வான்கரும்புலிகள் கொழும்பில் தாக்குதல்

விடுதலைப்புலிகளின் செய்திக்குறிப்பு தொகு

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினர்.[1]

இலங்கை பாதுகாப்பு அமைச்சு தொகு

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளன என்றும் இதனால் இறைவரி திணைக்கள கட்டிடம் சேதமடைந்ததாகவும் அங்கிருந்த பலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தளம் தெரிவித்தது.[2]

ஏனையவை தொகு

சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டனர்.

"தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.[3]

இவற்றையும் பார்க்க தொகு

பாக்க: wikisource:ta:கேணல் ரூபன் கடிதம்

மேற்கோள்கள் தொகு

  1. [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28478
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-19. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
  3. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28488