பெம்டோநொடி (காலம்)
கால அலகு
ஒரு பெம்டோநொடி (femtosecond) என்பது ஒரு காலத்திற்கான ஒரு அனைத்துலக முறை அலகு ஆகும். இது வினாடி அல்லது நொடியின் 10−15 அல்லது 1/1,000,000,000,000,000 பங்கிற்குச் சமம் ஆகும். அதாவது ஒரு நொடியின் குவாட்ரில்லினியனில் ஒரு பகுதி அல்லது ஒரு நொடியின் நூறு கோடியின்(நிகற்புதம்) ஒரு பகுதியின் பத்து இலட்சத்தின் ஒரு பகுதி ஆகும். [1]
பெம்டோநொடி என்ற வார்த்தையானது அனைத்துலக அலகு முறையின் முன்னொட்டுகளில் ஒன்றான பெம்டோ என்பதையும் அனைத்துலக முறை அலகான நொடி என்பதையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் குறியீடானது ஆங்கிலத்தில் fs என குறிக்கப்படுகிறது.[2]
ஒரு பெம்டோநொடி என்பது 1000 ஆட்டோநொடிகளுக்குச் சமமானது அல்லது 1/1000 பிகோநொடி ஆகும்.
- மூலக்கூறு இயக்கவியலில் பாவனையாக்கலில் பயன்படுத்தப்படும் காலத்தின் அலகு (1 ) ;fs இன் மடங்குகளில்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Femtosecond: Merriam Webster definition". Merriam Webster Online Dictionary.
- ↑ NIST. "NIST Definitions of the SI units".
- ↑ "Femtosecond: use in molecular dynamics simulation". LAMMPS Molecular Simulator.