பெயர் வினை (Name reaction) என்பது வினையைக் கண்டுபிடித்தவர்கள் அல்லது மேம்படுத்தியவர்களின் பெயரால் அழைக்கப்படும் ஒரு வேதியியல் வினையாகும். அறியப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வினைகளில் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான வினைகள் அவற்றைக் கண்டறிந்தவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இத்தகைய பெயர் வினைகளுக்கு என்றே ஏராளமான புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன [1][2][3][4]. மெர்க் அட்டவணை என்ற ஒரு வேதியியல் கலைக்களஞ்சியம் பெயர் வினைகளுக்காக ஒரு இணைப்பையும் சேர்த்துள்ளது.

வரலாறு தொகு

கரிம வேதியியல் 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்தபோது, வேதியியலில் பயனுள்ள செயற்கைக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் அல்லது வளர்த்தவர்களின் பெயர்களை குறிப்பிட்ட அவ்வினையின் பெயராக அழைக்கத் தொடங்கினர். பல வினைகளில், பெயரானது ஒரு நினைவூட்டாக மட்டுமே இருந்தது.

வினைவழி முறைகளுக்கோ அல்லது ஒட்டுமொத்தமாக நிகழும் வேதிமாற்றங்களுக்கோ பெயரிட திட்டவட்டமான அணுகுமுறைகள் இருந்தாலும் (எடுத்துக்காட்டாக பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் கடைபிடிக்கும் நிலைமாறல் பெயரிடுமுறை), பெரும் விளக்கம் கொண்ட அப்பெயர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையிலோ போதிய அளவு திட்டவட்டமானதாகவோ இருப்பதில்லை. எனவே நடைமுறைக்கு ஏற்றவகையில் மக்களின் பெயர்களைக் கொண்டு வேதியியல் வினைகளை அழைப்பதே திறம்பட்ட தொடர்புக்கு வழிவகுக்கின்றது.[5]

எடுத்துக்காட்டுகள் தொகு

நன்கு அறியப்பட்ட சில எடுத்துக்காட்டுகள்

சில வினைகளில் அவ்வாறாக வைக்கப்பட்ட பெயர்கள் உண்மையாக அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெயர்களாக இல்லை. அவ்வாறான சில எடுத்துக்காட்டுகள் [3]

மேற்கோள்கள் தொகு

  1. J. W., Suggs, J. William Suggs, Suggs. Organic Chemistry. Barron's, 2002, p. 109. ISBN 0-7641-1925-7
  2. Alfred Hassner, C. Stumer. Organic syntheses based on name reactions. Elsevier, 2002. ISBN 0-08-043260-3
  3. 3.0 3.1 Jie Jack Li. Name Reactions: A Collection of Detailed Reaction Mechanisms. Springer, 2003. ISBN 3-540-40203-9
  4. Bradford P. Mundy, Michael G. Ellerd, Frank G., Jr. Favaloro. Name Reactions and Reagents in Organic Synthesis. Wiley, 2005. ISBN 0-471-22854-0
  5. J. F. Burnett (1965). "Organic Name Reactions. A contribution to the terminology of organic chemistry, biochemistry, and theoretical organic chemistry. Helmut Krauch and Werner Kunz. Translated from the second revised German edition by John M. Harkin. Wiley, New York, 1964. xxiv + 620 pp. Illus. $16". Science 147 (3659): 726–727. doi:10.1126/science.147.3659.726. Bibcode: 1965Sci...147..726K. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயர்_வினை&oldid=2747309" இலிருந்து மீள்விக்கப்பட்டது