பெரகத் வர்கீசு பெஞ்சமின்

பெரகத் வர்கீசு பெஞ்சமின் (Perakath Verghese Benjamin) என்பவர் இந்திய மருத்துவர் மற்றும் மருத்துவ எழுத்தாளர் ஆவார். இவர் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் செயின்ட் தாமஸ் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். பெஞ்சமின் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் காசநோய் ஆலோசகர் மற்றும் இந்தியக் காசநோய் சங்கத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் ஆவார்.[1][2] இந்தியன் ஜர்னல் ஆஃப் டியூபர்குலோசிசு நிறுவன ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.[1][3] சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசின் முயற்சிகளை, இந்தியாவின் காசநோய்க்கு எதிரான போராட்டம் - 1956 என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.[4] இந்திய அரசு 1955ஆம் ஆண்டு மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது. கேரள மாநிலத்திலிருந்து இந்த விருதை வென்ற முதல் நபர் இவர்தான்.[5]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Med India" (PDF). Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் April 1, 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "TBASS". TBASS. 2015. பார்க்கப்பட்ட நாள் April 1, 2015.
  3. Indian Journal of Tuberculosis. Elsevier. http://www.journals.elsevier.com/indian-journal-of-tuberculosis/. 
  4. India's Fight Against Tuberculosis - 1956. Diocesan Press, Madras. http://www.ebay.com/itm/INDIAS-FIGHT-Against-TUBERCULOSIS-1956-P-V-Benjamin-/380352523294. 
  5. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on அக்டோபர் 19, 2017. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.

மேலும் படிக்க தொகு

  • Dr. P. V. Benjamin (1956). India's Fight Against Tuberculosis - 1956. Diocesan Press, Madras.