பெரிட்டைட்டு-(Y)

போரோசிலிக்கேட்டு கனிமம்

பெரிட்டைட்டு-(Y) (Perettiite-(Y)) என்பது Y2Mn4FeSi2B8O24.[2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். ஒருங்கிணைவு சிலிக்கேட்டு போரேட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு சுவிசட்சலாந்து நாட்டு மணிக்கல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் அடால்ஃப் பெரிட்டி என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மியான்மரின் மொகோக்கில் இருந்த ஒரு பினாக்கைட்டு படிகத்தில் உள்ளடங்கி இருந்தது கண்டறியப்பட்டது.[4]

பெரிட்டைட்டு-(Y)
Perettiite-(Y)
பீனாக்கைட்டில் உள்ள பெரிட்டைட்டு
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுY2Mn4FeSi2B8O24
இனங்காணல்
படிக இயல்புநுண்ணோக்கியளவு ஊடுறுவல்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு(010)
மோவின் அளவுகோல் வலிமை7
ஒப்படர்த்தி4.533
மேற்கோள்கள்[1][2][3]

2015 ஆம் ஆண்டில் பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெரிட்டைட்டு கனிமத்தை அங்கீகரித்து Ptt-Y[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தியது.

பீனாக்கைட்டு படிகத்தில் உள்ளடங்கிய பெரிட்டைட்டு-(Y)

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. 2.0 2.1 Perettiite on Mindat.org
  3. Rosa Micaela Danisi; Thomas Armbruster; Eugen Libowitzky; Hao A.O. Wang; Detlef Günther; Mariko Nagashima; Eric Reusser; Willy Bieri (2015). "Perettiite-(Y), Y3+2Mn2+4Fe2+[Si2B8O24, a new mineral from Momeik, Myanmar"]. European Journal of Mineralogy 27 (6): 793–803. doi:10.1127/ejm/2015/0027-2483. Bibcode: 2015EJMin..27..793D. http://eurjmin.geoscienceworld.org/content/early/2015/08/26/ejm.2015.0027-2483.abstract. 
  4. GRS - Perettiite – A New Mineral Discovery From Burma
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிட்டைட்டு-(Y)&oldid=4136958" இலிருந்து மீள்விக்கப்பட்டது