பெரினிசு ஆபாட்

பெரினிசு ஆபாட்  (Berenice Abbott;  சூலை  17, 1898 – திசம்பர் , 1991) [1] என்பவர் அமெரிக்கப்  பெண்  நிழற்படக் கலைஞர் ஆவார். நியூயார்க்கில் உள்ள சிற்பங்கள், 1930 களின் நகர வடிவமைப்பு மற்றும் 1940-60 காலகட்டத்தில் நிகழ்ந்த அறிவியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் நிழற்படங்கள் இவருடைய படைப்புகள் ஆகும்.[2]

பெரினிசு ஆபாட்

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

ஓகியோவில் சுப்ரிங்பீல்ட் என்ற ஊரில் பிறந்தார்.[3] ஓகியோ மாநில பல்கலைக் கழகத்தில் பயின்றபோதிலும் படிப்பைத் தொடராமல் இடையிலேயே படிப்பை விட்டு விட்டார்.[4] சிற்பம் மற்றும் ஓவியம் கற்பதற்காக ஓகியோவிலிருந்து நியூயார்க்கு வந்தார். மாடலாக மாறிய இவர் சர்ரியலிச ஓவியரும் நவீன ஒளிப்படக் கலைஞருமான மெனரேவுக்கு மாடலாக இருந்தார்.

நியூயார்க்கு நகர கட்டடங்களையும் நகர்ப்புற வடிவமைப்பையும் தமது புகைப் படக் கருவியில் பதிவு செய்தார். பட நிலையம் ஒன்றைத் தொடங்கினார்.  எழுத்தாளர்கள், கலைஞர்கள், பணக்காரர்கள் போன்றோரைப் படம்பிடித்தார்.புகழ் பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் இன் படம் இவரது படைப்புகளில் புகழ் பெற்ற ஒன்று ஆகும்.

ஆபாட் 1925 முதல் 1929 வரை பாரிசு நகரில் மே ரே என்ற நிழற்படக் கலைஞரிடம் உதவியாளராகப் பணி புரிந்தார். 1926 இல் தமது நிழற்படங்கள் கண்காட்சியை முதன்முதலாகத்  தனியாக  பாரிசில் நடத்தினார்.  அந்தக் காலத்துப் பெரிய கலைஞர்களின் படங்கள் அந்தக் கண்காட்சியில் இடம் பெற்றன.      

மேயினில் 1950 பிற்பகுதியில் ஒரு வீட்டை வாங்கினார். அங்கேயே நிலையாகத் தங்கினார். அங்கு பல இடங்களைப் பதிவு செய்து, நிழற்படத் தொகுப்பை நூலாக்கி வெளியிட்டார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. 2000 ஆம் ஆண்டில் பன்னாட்டுப் புகழ் பெற்ற நிழற்படக்காரர்கள் வரிசையில் இவர் இடம் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Abbott, Berenice". Encyclopædia Britannica (15th) I: A-Ak – Bayes. (2010). Chicago, Illinois: Encyclopædia Britannica, Inc.. 12–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59339-837-8. 
  2. https://www.moma.org/interactives/objectphoto/artists/41.html
  3. "Abbott, Berenice". Who Was Who in America, with World Notables, v. 10: 1989–1993. New Providence, NJ: Marquis Who's Who. 1993. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0837902207.
  4. Yochelson, pp. 9–10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரினிசு_ஆபாட்&oldid=2707782" இலிருந்து மீள்விக்கப்பட்டது