பெரியார் கணினி (நூல்)
பெரியார் கணினி என்னும் நூல் பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் ஆக்கம் ஆகும். இந்நூலில் பெரியாரின் கருத்துகள் காலவரிசையிலும்,பொருள்வரிசையிலும் திரட்டப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்கு அவர்களின் பணியை எளிதாக்கும் விதத்தில் இந்நூல் உள்ளது. இந்நூலை கையாள வசதியாக இருதொகுதிகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதற்பதிப்பாக 1996 மார்சில் பூம்புகார் பதிப்பகம் வெளியி்ட்டது.இரண்டாம் பதிப்பாக ஞாயிறுபதிப்பகம் 1998 இல் வெளியிட்டுள்ளது.
நூலின் அமைப்பு
தொகுமுதற் பகுப்புகள், அவற்றின் துணைப் பகுப்புகள், சில துணைப் பகுப்புகளுக்குக் கிளைப் பகுப்புகள் என வகுத்துக் கொண்டு பெரியாரின் கருத்துகள் திரட்டப்பட்டுள்ளன. முதற் பகுப்புகள் மட்டும் அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக் கனிகள் யாவும் அவை வெளிவந்த கால அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளன. சான்றாகக் கடவுள்பற்றிப் பெரியார் 1929 இல் என்ன சொன்னார்; 1930, 42, 55, போன்ற பிற காலங்களில் அவர் அதுபற்றி எத்தகைய கருத்துகளை வெளியிட்டார் என்பனவற்றை முறைப்படி அறிந்து கொள்ள இது தோதாக இருக்கக்கிறது. மதுவிலக்கு தேவை என்று பேசிய பெரியார் பிற்காலத்தில் அதற்கு மாறாகப் பேசி இருப்பதையும் அறியலாம். [1]
தொகுப்புகளின் எண்ணிக்கை
தொகுஇதில் மொத்தம் பெரியாரின் கருத்துகள் 48 தலைப்புகளில் முதற் பகுப்புகளாகவும், பிறகு 309 துணைப்பகுப்புகளும்,11 கிளைப்பகுப்புகளும் அடங்கியுள்ளன. இம் மூவகைப் பகுப்புகளிலுமாக மொத்தம் 4884 கருத்துக் கனிகள் அடங்கியுள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ பெரியார் கணிணி, மா.நன்னன். முகவுரையில்