பெரிய வாழை

தாவர இனம்

பெரிய வாழை என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் மியூசா எண்செட்டி (Muse ensete) ஆகும். இது மியூசேசியீ ( Musaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது அபிசினியன் வாழை (Abyssinian Banana) என்றும் அழைக்கப்படுகிறது.[1][2] இத்தாவரத்தின் வளர்ப்பு வடிவம் எத்தியோப்பியாவில் மட்டுமே பயிரிடப்படுகிறது, அங்கு இது சுமார் 20 மில்லியன் மக்களுக்கு முதன்மையான உணவை வழங்குகிறது.[3][4]

மியுசா எண்செட்டி
பெரிய வாழை

மரத்தின் அமைப்பு

தொகு
 
உயரமான மியுசா எண்செட்டி

வாழை மரங்களில் மிக உயரமானது. இது 25 முதல் 40 அடி உயரம் வளரக் கூடியது.[5] இதனுடைய மரம் பொய்த்தண்டால் ஆனது. அடிப்பகுதியில் சதைப் பற்றுடன் கூடிய கிழங்கு உள்ளது. இதனுடைய இலைகள் பச்சையாகவும், நடுநரம்பு சிவப்பாகவும், இலைகளின் ஓரம் ஊதா சிவப்பு நிறத்திலும் உள்ளது.

வாழையிலிருந்து வளரும் பூங்கொத்து மேல்நோக்கி நேராக வளரும். கீழ்நோக்கி வளைந்து தொங்குவது கிடையாது. பூவடிச் செதில்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதில் சிறிய காய்கள் வருகின்றன. இதனுடைய பழங்களை சாப்பிட முடியாது. பழத்திற்குள்ளே மிக பெரிய விதைகள் உள்ளன.

காணப்படும் பகுதி

தொகு

இது கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் ஈரமான காட்டுப் பகுதியில் வளர்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ensete ventricosum". PlantZAfrica (in ஆங்கிலம்). South African National Biodiversity Institute (SANBI). பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  2. Wilkin, Paul; Demissew, Sebsebe; Willis, Kathy; Woldeyes, Feleke; Davis, Aaron P.; Molla, Ermias L.; Janssens, Steven; Kallow, Simon et al. (2019). "Enset in Ethiopia: a poorly characterized but resilient starch staple" (in en). Annals of Botany 123 (5): 747–766. doi:10.1093/aob/mcy214. பப்மெட்:30715125. 
  3. "A 'banana falsa' que pode ser solução para alimentar milhões". BBC News Brasil. https://www.bbc.com/portuguese/internacional-60091991. 
  4. Brenan, J.P.N.; Greenway, P.J. (1949). Checklists of the Forest Trees and Shrubs of the British Empire - #5 - Tanganyika Territory - Part 2. Oxford, England: Imperial Forestry Institute. p. 364.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வாழை&oldid=4049149" இலிருந்து மீள்விக்கப்பட்டது