பெருங்குன்றூர் கிழார்

சங்ககாலப் பெருங்குன்றூர் கிழார் பெருங்குன்றூரில் வாழ்ந்தவர். பாட்டியல் புலவர் பெருங்குன்றூர் கிழார் சங்கப்புலவரின் பெயரால் குறிப்பிடப்பட்டவர். முந்தையவர் கி. பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிந்தையவர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குச் சற்றே முந்தையவர். முந்தையவர் இலக்கியப் புலவர். பிந்தையவர் இலக்கணப்புலவர்.