பெருநல்லாள்

பெருநல்லாள் என்பவர் தேவ உலக மங்கையான ஊர்வசியின் மனித பிறப்பு ஆவார். இவர் பெரிய நல்லக்காள் என்றும் அறியப்படுகிறார்.

புராணக் கதை தொகு

தேவ கன்னிகளான ரம்பையும், ஊர்வசியும் தேவலோகத்தில் ஆடல்கலையில் திளைத்திருந்தனர். அப்பொழுது அங்கு வருகை தந்த குரு பகவானை ஆடல்கலையின் தாக்கத்தினால் உணராமல் போனார்கள். இந்து தர்மத்தின் அடிப்படையில் குருவிற்கு வணக்கம் செலுத்தி பணிவது கடமையாகும். அதனை இருவரும் மறந்தனர் என குருபகவான் கோபம் கொண்டார். இருவரையும் மானுட வடிவில் இரட்டைக் குழந்தைகளாக பிறக்க சாபமிட்டார். அதனால் சிறுநல்லாளாக ரம்பையும், பெருநல்லாளாக ஊர்வசியும் முக்தி என்பவரின் மகளாக பிறந்தனர்.

முக்தி இறைவனுக்கு தொண்டு செய்யும் தாசியாவார். அதனால் சிறுநல்லாலும், பெருநல்லாளும் சிவவழிபாட்டில் ஆர்வம் கொண்டனர். இவர்களின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், இவர்களின் வறுமையை போக்குவதற்காக இரண்டு மலைக்குன்றுகளை பொன்னாக மாற்றினார். அம்மலைகள் பொன்மலை, கனககிரி என்று அறியப்படுகின்றன.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருநல்லாள்&oldid=2121049" இலிருந்து மீள்விக்கப்பட்டது