பெருந்தோட் குறுஞ்சாத்தன்

பெருந்தோட் குறுஞ்சாத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 308 எண்ணுள்ள பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் தரும் செய்தி

தொகு

இந்தப் பாடல் குறிஞ்சித்திணை பற்றியது.

திருமணம் காலம் தாழ்கிறது. தலைவி துடிக்கிறாள். தோழி பொறுத்திருக்குமாறு தலைவியை வற்புறுத்துகிறாள். மலைநாடன் கேண்மை காமம் தந்து தீர்க்கும் 'கை'யாகவும் ஒழுக்கமாகத் தாழ்ந்து கிடக்கும் ஒன்று அன்று - என்கிறாள். (ஆம் = நீர்; வாழை நுகும்பு = வாழை மட்டை.) அவன் மலையில் நீர் வழிந்தோடும். அப்பகுதியில் வளரந்துள்ள வாழைமரம் வருந்தும்படி களிறு தன் பிடியின் தலையைத் தடவிப் பிடியின் ஆவலைத் தணிக்கும். இப்படிப்பட்ட மலையின் தலைவன் அவன் என்கிறாள் தோழி.

மேற்கோள்கள்

தொகு