பெரும் நீல மலைகள் பகுதி
பெரும் நீலமலைப் பகுதி (Greater Blue Mountains Area), ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும். 1,032,649 எக்டேர் பரப்பளவு கொண்ட இப்பகுதி 2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 24 ஆவது அமர்வில் உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.[1]
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
2008 இல் யமிசன் பள்ளத்தாக்குக்கு மேலான ஒரு தோற்றம். | |
அமைவிடம் | நியூ சவுத் வேல்சு, ஆசுத்திரேலியா |
கட்டளை விதி | இயற்கைக் களம்: (ix), (x) |
உசாத்துணை | 917 |
பதிவு | 2000 (24-ஆம் அமர்வு) |
பரப்பளவு | 1,032,649 ha (2,551,730 ஏக்கர்கள்) |
Buffer zone | 86,200 ha (213,000 ஏக்கர்கள்) |
ஆள்கூறுகள் | 33°42′S 150°0′E / 33.700°S 150.000°E |
விபரங்கள்
தொகுஇப்பகுதி, உயிரினங்கள் நிரம்பிக் காணப்படும் கரடுமுரடான மேட்டுச் சமவெளிகளையும், செங்குத்தான மலை முகப்புக்களையும், ஆழமான, அணுகுவதற்குக் கடினமான பள்ளத்தாக்குகளையும், ஆறுகளையும், ஏரிகளையும் கொண்டது. இந்த இயற்கையான இடத்தில் காணப்படும் அரிய தாவரங்களும், விலங்குகளும், ஆசுத்திரேலியாவின் தொன்மை, உயிரினப் பல்வகைமை என்பன குறித்த சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. இது ஆசுத்திரேலியாவின் தனித் தன்மை வாய்ந்த இயூகலிப்தசு தாவரங்களினதும், அது சார்ந்த தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றினதும் கூர்ப்பின் கதையைக் கூறுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Greater Blue Mountains Area". World Heritage List. UNESCO. 2014. Archived from the original on 28 செப்டெம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2014.