பெரும் பசிபிக் குப்பை மண்டலம்

பெரும் பசிபிக் குப்பை மண்டலம் (Great Pacific garbage patch, அல்லது Pacific trash vortex), என்பது, வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்த வடக்கு பசிபிக் சுழலோட்டத்தில் மாட்டியிருந்த சூழல் மாசடைதலை குறிக்கும்[1]. இம்மண்டலத்தில் நெகிழி துகள்கள், வேதிக் கழிவுகள், மற்றும் பல்வேறு குப்பை கலந்துகொண்டுள்ளன. ஏறத்தாழ மேற்கு 135°இலிருந்து 155° வரை, வடக்கு 35°இலிருந்து 42°வரை இப்பகுதியை காணலாம்.[2]

ஐந்து பெரும் சுழலோட்டங்களில் ஒன்றாக வடக்கு பசிபிக் சுழலோட்டத்தில் பெரும் பசிபிக் குப்பை மண்டலம் அமைந்துள்ளது
இப்பகுதியில் குப்பையை தின்னு இறந்த ஒரு அல்பட்ரோஸ்

பசிபிக் பெருங்கடலின் எல்லைகளில் இருக்கும் நாடுகளிலிருந்தும், கப்பல்களிலிருந்தும் வெளிவருகிற சூழல் மாசடைகள் கடல் நீரோட்டங்களில் மாட்டி இப்பகுதியில் குவிக்கப்பட்டன என்று சூழலியலாளர்கள் நினைக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Dautel, Susan L. "Transoceanic Trash: International and United States Strategies for the Great Pacific Garbage Patch," 3 Golden Gate U. Envtl. L.J. 181 (2009)
  2. Moore, Charles (November 2003). Across the Pacific Ocean, plastics, plastics, everywhere. Natural History Magazine. http://www.mindfully.org/Plastic/Ocean/Moore-Trashed-PacificNov03.htm. பார்த்த நாள்: 2014-04-16